ஆகஸ்ட் 23, மளாஹிட் (Cricket News): அயர்லாந்து (Ireland) நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் (Team India) அணி, 3 டி20 போட்டிகளில் அயர்லாந்து அணியை எதிர்கொண்டது. முதல் இரண்டு ஆட்டங்களிலும் இந்திய (India Vs Ireland T20I 2023) அணி அபார வெற்றி பெற்றது.
நேற்று மூன்றாவது மற்றும் இறுதி போட்டி நடக்கவிருந்த நிலையில், மழை குறுக்கிட்டதன் காரணமாக ஆட்டம் தடைபட்டது. இதனால் புள்ளிப்பட்டியலின் அடிப்படையில் இந்திய அணி 2 போட்டிகளில் வெற்றி அடைந்ததால், இந்திய அணி அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜஸ்பிரித் பும்ரா தலைமையிலான இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், சஞ்சு சாம்சன், ஜிதேஷ் சர்மா, சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, ரவி பிஷ்னோய், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங் , முகேஷ் குமார், அவேஷ் கான் ஆகியோர் இடம்பெற்று இருந்தனர். Famous Actors under Trouble: கொடைக்கானலில் அனுமதியின்றி கட்டப்பட்டுவரும் கட்டிடங்களால் சிக்கல் – பிரபல நடிகர்களை பதறவைக்கும் நோட்டீஸ்.!
அயர்லாந்து அணியின் சார்பில் பால் ஸ்டிர்லிங் (கேப்டன்), ஆண்ட்ரூ பால்பிர்னி, ராஸ் அடேர், ஹாரி டெக்டர், கரேத் டெலானி, கர்டிஸ் கேம்பர், ஜார்ஜ் டோக்ரெல், ஃபியோன் ஹேண்ட், லோர்கன் டக்கர் (WK), மார்க் அடேர், ஜோசுவா லிட்டில், பேரி மெக்கார்த்தி, தியோ வான் வைட், பெஞ்சமின், பெஞ்சமின் யங் ஆகியோர் விளையாடினர்.
முதல் நாள் ஆட்டத்தில் 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிகண்ட இந்திய அணி, இரண்டாவது நாள் ஆட்டத்தில் 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது.