Smriti Mandhana & Pratika Rawal | INDW Vs PAKW Cricket (Photo Credit: @RichKettle07 @digital_sports X)

அக்டோபர் 05, கொழும்பு (Cricket News Tamil): இலங்கையின் கொழும்புவில் இன்று இந்திய மகளிர் தேசிய கிரிக்கெட் அணி Vs பாகிஸ்தான் மகளிர் தேசிய கிரிக்கெட் அணி (India Women's National Cricket Team Vs Pakistan Women's National Cricket Team) ஐசிசி உலகக்கோப்பை 2025 போட்டி மாலை 3 மணிமுதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் இந்திய கிரிக்கெட் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்திய அணியின் வீராங்கனைகள் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். INDW Vs PAKW Cricket: டாஸ் வென்று பாக்., பௌலிங் தேர்வு.. ஐசிசி மகளிர் உலகக்கோப்பை: இந்தியா Vs பாகிஸ்தான் பெண்கள் கிரிக்கெட் போட்டி..! 

இந்தியா Vs பாகிஸ்தான் பெண்கள் கிரிக்கெட் போட்டி (India Vs Pakistan Cricket Match):

இந்திய அணியின் சார்பில் முதலில் களமிறங்கிய பிரதிகா ராவல் - ஸ்மிருதி மந்தனா ஜோடி அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தது. பிரதிகா 37 பந்துகளில் 31 ரன்கள் அடித்திருந்தார். 5 பவுண்டரி விளாசினார். ஸ்மிருதி மந்தனா 32 பந்துகளில் 23 ரன்கள் எடுத்திருந்தார். 4 பவுண்டரி விளாசி இருந்தார். 14வது ஓவர்களுக்குள் இருவரும் தங்களின் விக்கெட்டை இழந்தனர். 9.0 ஓவரில் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர் பாத்திமா சானாவின் பந்துகளில் ஸ்மிருதி எல்பிடபிள்யு முறையில் விக்கெட் இழந்து வெளியேறினார். தொடர்ந்து, ராவல் சதியா இஃபாலின் பந்தில் போல்ட் அவுட் ஆகி வெளியேறினார். 14.5 ஓவரில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 67 ரன்களை எடுத்திருந்தது. ஆட்டம் தொடருகிறது.