Virat Kohli | IND VS SA Text 2023 (Photo Crediit: @BCCI X)

டிசம்பர் 29, ஜோக்கன்ஸ்பர்க் (Sports News): தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி - தென்னாபிரிக்க கிரிக்கெட் (India Vs South Africa Test Series) அணி இடையே நடைபெற்ற முதல் 3 டி20 தொடர்களில், இரு அணிகளும் தலா ஒரு புள்ளிகள் பெற்று ஆட்டத்தை சமன் செய்தன. 50 ஓவர்கள் கொண்ட ஒரு நாள் போட்டியில், இந்தியா இரண்டு போட்டிகளில் வெற்றி அடைந்து, கோப்பையை தனதாக்கியது.

வெளுத்து வாங்கிய தென் ஆப்ரிக்க அணி: அதனைத்தொடர்ந்து, கடந்த 26 ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், முதல் ஆட்டத்தில் இந்தியா தனது 10 விக்கெட்டையும் 67.4 ஓவர்களில் இருந்து 245 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அதனை தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி, 108.4 ஓவரில் 408 ரன்கள் எடுத்து முன்னிலை பெற்றது. தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 154 ரன்கள் முன்னேறி இருந்தது. SJ Suryah Opens Up: திருமணம் செய்து கொள்ளாத எஸ்.ஜே.சூர்யா! காரணம் இதுதானா?.! 

படுதோல்வி அடைந்த இந்தியா: நேற்று நடைபெற்ற இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய இந்திய அணி 34 ஓவரில் தனது மொத்த விக்கெட்டையும் இழந்து 131 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதனையடுத்து, தென்னாபிரிக்க அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் முதல் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. இந்திய அணியின் சார்பில் விளையாடிய வீரர்களின் சுப்னம் கில் 37 பந்துகளில் 26 ரன்னும், விராட் கோலி 82 பந்துகளில் 76 ரன்கள் மட்டுமே அடித்திருந்தனர்.

இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றம் தந்த ஆட்டம்: எஞ்சிய வீரர்கள் சொற்ப ரங்களில் வெளியேறினார். இவர்களில் ரோகித் சர்மா, ரவிச்சந்திரன் அஸ்வின், பும்ரா, கிருஷ்ணா ஆகியோர் எந்தவிதமான ரன்களும் எடுக்காமல் ஆட்டத்தில் இருந்து வெளியேறி இருந்தனர். இதனால் இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், முதல் போட்டியில் தோல்வி அடைந்துள்ளது.

அடுத்த போட்டி ஜனவரி 3ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை நடைபெறுகிறது.