India Vs West Indies: இந்தியா அனல்பறக்கும் பேட்டிங்.. மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 518 ரன்கள் இலக்கு.. சுப்மன் கில் & யஜஸ்வி ஜெய்ஸ்வால் இரட்டை சதம்.!

இந்தியா தேசிய கிரிக்கெட் அணி - வெஸ்ட் இண்டீஸ் தேசிய கிரிக்கெட் அணி (India National Cricket Team Vs West Indies National Cricket Team) மோதும் ஆட்டம் இன்று டெல்லி அருண் ஜெட்லீ கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. இந்திய கிரிக்கெட் அணி 134.2 ஓவரில் 518 ரன்கள் எடுத்துள்ளது. 518 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மேற்கிந்திய தீவுகள் அணி களமிறங்க உள்ளது.

India Vs West Indies: இந்தியா அனல்பறக்கும் பேட்டிங்.. மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 518 ரன்கள் இலக்கு.. சுப்மன் கில் & யஜஸ்வி ஜெய்ஸ்வால் இரட்டை சதம்.!
India vs West Indies Cricket Match (Photo Credit : @BCCI X)

அக்டோபர் 11, புதுடெல்லி (Sports News): இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி - இந்திய தேசிய கிரிக்கெட் அணியுடன் (India - West Indies) ஒரு நாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது. அந்த வகையில், முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்றது. அதனைத்தொடர்ந்து, இரண்டாவது ஆட்டம் அக்டோபர் 10ஆம் தேதியான இன்று முதல் தொடங்கி நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்திய தேசிய கிரிக்கெட் அணி Vs மேற்கிந்திய தீவுகள் தேசிய கிரிக்கெட் அணி (India National Cricket Team Vs West Indies National Cricket Team) மோதுகிறது. இந்த ஆட்டம் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது.

இந்தியா எதிர் மேற்கிந்திய தீவுகள் அணி கிரிக்கெட் போட்டி (India Vs West Indies Cricket Match):

இந்திய மண்ணில் மேற்கிந்திய தீவுகளின் டெஸ்ட் அணி தொடர்ச்சியாக சொதப்பி வந்தாலும், அது விடாமுயற்சியுடன் போராடி வருகிறது. முந்தைய ஆறு போட்டிகளை பொறுத்தமட்டில், அதில் தோல்வியை தழுவி இருந்தாலும், போட்டி மூன்று நாட்களுக்குள் முடிவது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை குறைத்துள்ளது. டெல்லி மைதானம் போட்டியின் தொடக்கம் சுழலுக்கு சாதகமாக இருக்கும். பேட்டர்களுக்கும் நல்ல வாய்ப்பை ஏற்படுத்தித் தரும். இரண்டு அணி வீரர்களும் ரன்களை குவிக்கலாம் என்ற நிலையில், போட்டி சுவாரசியமாக நடந்து வருகிறது. இந்திய அணியின் சார்பில் களமிறங்கி விளையாடிய வீரர்கள் முதல் இன்னிங்ஸில் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அணியின் விக்கெட்டுகள் பெருவாரியாக இழக்கப்படாமல் போட்டி டிக்லர் செய்யப்படும் நிலைக்கு வந்துள்ளது. India Vs West Indies: சதம் கடந்து விளாசிய யஜஸ்வி ஜெய்ஸ்வால்.. இந்தியா Vs மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட்.. இந்தியா தெறி சம்பவம்.. சூடுபிடிக்கும் ஆட்டம்.!

நின்று ஆடிய சுப்மன் கில் & யஜஸ்வி ஜெய்ஸ்வால் - சதம் அடித்து விளாசல்:

இந்திய அணியின் சார்பில் விளையாடிய யஜஸ்வி ஜெய்ஸ்வால் 258 பந்துகளில் 175 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். அவர் மொத்தமாக 22 பவுண்டரிகள் விளாசி இருந்தார். கே.எல் ராகுல் 54 பந்துகளில் 38 ரன்கள் எடுத்திருந்தார். சாய் சுதர்சன் 165 பந்துகளில் 87 ரன்கள் எடுத்திருந்தார். 12 பவுண்டரிகளையும் விளாசி இருந்தார். சுப்மன் கில் ஆட்டமிழக்காமல் 196 பந்துகளில் 129 ரன்கள் எடுத்திருந்தார். மொத்தமாக 16 பவுண்டரியில் இரண்டு சிக்ஸர்களை விளாசி இருந்தார். நிதிஷ்குமார் ரெட்டி 54 பந்துகளில் 43 ரன்கள் எடுத்திருந்தார். துருவ் ஜூரல் 79 பந்துகளில் 44 ரன்கள் எடுத்திருந்தார். இரண்டாம் நாள் ஆட்டம் முடிவில் இந்திய கிரிக்கெட் அணி 134.2 ஓவர்கள் பேட்டிங் செய்திருந்த நிலையில், 5 விக்கெட் இழப்புக்கு 518 ரன்கள் எடுத்திருந்தது.

இந்தியா Vs வேஸ்ட் இண்டீஸ் போட்டியில் வெற்றி யாருக்கு (India Vs West Indies Winning Prediction)?

இதனை அடுத்து போட்டியை டிக்லர் செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 518 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மேற்கிந்திய தீவுகள் அணி களமிறங்க உள்ளது. இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற 97% வாய்ப்பு இருப்பதாகவும், மேற்கிந்திய தீவுகள் வெற்றி பெற 0.6% வாய்ப்பு இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. 2% போட்டி சமநிலையில் முடிய வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மேற்கிந்திய தீவுகள் அணியை பொறுத்தவரையில் பந்துவீச்சாளர் ஜோமல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். இந்திய அணியினரின் அபாரமான ஆட்டம் காரணமாக அணியின் ரன்கள் அதிரடியாக உயர்ந்துள்ளது.

சதம் அடித்து விளாசிய சுப்மன் கில்:

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 518 ரன்கள் இலக்கு:

(The above story first appeared on LatestLY on Oct 11, 2025 01:44 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).