அக்டோபர் 25, புனே (Sports News): இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதலாவது டெஸ்டில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், நேற்று (அக்டோபர் 24) இந்தியா - நியூசிலாந்து (IND Vs NZ 2nd Test, Day 2) அணிகள் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி புனேயில் (Pune) தொடங்கியது. இதில், டாஸ் வென்று முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 259 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து, களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா (Rohit Sharma) டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 1 விக்கெட்டை இழந்து 16 ரன்கள் அடித்திருந்தது. IND Vs NZ 2nd Test: இரண்டாம் நாள் மதிய உணவு இடைவேளை; இந்தியா 7 விக்கெட்களை இழந்து தடுமாற்றம்.. சான்ட்னர் அசத்தல் பந்துவீச்சு..!
இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. இதில், ஆரம்பத்தில் இருந்தே நிதானமாக விளையாடி வந்த ஜெய்ஸ்வால் - கில் ஜோடி அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். அடுத்து வந்த விராட் கோலி (Virat Kohli) 1 ரன்னில் சான்ட்னர் பந்தில் போல்டானார். இதனையடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் ரிஷப் பண்ட் 18, சர்பராஸ் கான் 11, அஸ்வின், 4 அடுத்தடுத்து பெவிலியன் நோக்கி திரும்பினர்.
மதிய உணவு இடைவேளைக்கு பிறகு ஜடேஜா (Ravindra Jadeja) சற்று அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார். அப்போது, சான்ட்னர் பந்தில் எல்பிடபிள்யூ அவுட் ஆனார். அடுத்த வந்தவர்கள் விரைவில் அவுட்டாகி வெளியேற இந்தியா 45.3 ஓவர்களில் 156 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜடேஜா 38 ரன்கள் அடித்தார். நியூசிலாந்து அணி தரப்பில் மிட்செல் சான்ட்னர் (Mitchell Santner) அபாரமாக பந்துவீசி 7 விக்கெட்களை வீழ்த்தினார். மேலும், பிலிப்ஸ் 2 மற்றும் சவுதி 1 விக்கெட்களை வீழ்த்தினர். நியூசிலாந்து அணி 103 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடுகிறது.
அதிரடியாக விளையாடிய ஜடேஜா:
When the moment calls, Jadeja responds with a stunning six! 🥶💥#INDvNZ #TeamIndia #IDFCFirstBankTestTrophy #JioCinemaSports pic.twitter.com/lLThDDyVsz
— JioCinema (@JioCinema) October 25, 2024