India Vs Pakistan Asia Cup 2025 Cricket Match (Photo Credit: @BCCI X)

செப்டம்பர் 28, துபாய் (Sports News): ஆசியக்கோப்பை 2025 (Asia Cup 2025) கிரிக்கெட் தொடரில், துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் (Dubai International Cricket Stadium) இன்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் (India Vs Pakistan Cricket) மோதும் ஆட்டம் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய தேசிய கிரிக்கெட் அணி - பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணி (India National Cricket Team Vs Pakistan National Cricket Team) முதலில் பேட்டிங் செய்ய அனுமதிப்பதை ஊக்குவித்து பௌலிங் தேர்வு செய்தது. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி முதலில் பேட்டிங் செய்து வந்தது. முதல் 10 ஓவரில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி விறுவிறுப்புடன் ஆடி ரன்களை குவித்தாலும், அடுத்த 10 ஓவரில் ரன்கள் இந்திய அணியின் பந்துவீச்சில் கட்டுப்படுத்தப்பட்டன. IND Vs PAK Asia Cup Final 2025: இந்தியா Vs பாகிஸ்தான் ஆசியக்கோப்பை 2025 இறுதிப்போட்டி.. இந்தியா செய்யப்போவது என்ன? 

இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி (India Vs Pakistan Cricket Match Today):

முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியின் சார்பில் விளையாடியவர்களில் சஹிபஷடா பர்ஹான் 38 பந்துகளில் 57 ரன்னும், பாக்கர் ஜமன் 35 பந்துகளில் 46 ரன்கள், சயிம் அயூப் 11 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து இருந்தனர். முதலில் 3 ஆட்டக்காரர்களும் 10 ஓவர்களில் 80 ரன்களை கடந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர். தொடர்ந்து உணவு இடைவேளைக்குப்பின் ஆட்டம் தலைகீழாக மாறியது. முகம்மது ஹாரிஸ், சல்மான் ஆகா, ஹுசைன் டலட், ஷஹீன் அப்ரிடி, பஹீம் அஸ்ரப் ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். இதனால் பாகிஸ்தான் அணி ரன்கள் எடுக்காமல் திணறிப்போனது. முகம்மது நவாஸ் 9 பந்துகளில் 6 ரன்கள் எடுத்தார்.

India Vs Pakistan Asia Cup 2025 Cricket Match (Photo Credit: @BCCI X)
India Vs Pakistan Asia Cup 2025 Cricket Match (Photo Credit: @BCCI X)

இந்திய அணிக்கு 147 ரன்கள் இலக்கு:

இந்திய அணியின் சார்பில் விளையாடிய குல்தீப் யாதவ் 4 விக்கெட், அக்சர் படேல், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட்டை கைப்பற்றி அசத்தி இருந்தனர். 20 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்டையும் இழந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 146 ரன்கள் எடுத்தது. இதனால் 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்யவுள்ளது.

அசத்தல் பந்துவீச்சு: