
மே 16, புதுடெல்லி (Sports News): இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன், ரசிகர்கள் ஹிட்மேன் என அழைக்கப்படுவர் ரோஹித் சர்மா (Rohit Sharma). இதுவரை இந்திய கிரிக்கெட் அணிக்காக பல்வேறு போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித், தனது தனித்துவமான பேட்டிங் திறன் காரணமாக ரசிகர்களால் பாராட்டப்பட்டார். 50 ஓவர்கள் கொண்ட உலகக்கோப்பை சாம்பியன்ஸ்ஷிப் தொடரில் சமீபத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான அணி வெற்றி அடைந்து இருந்தது. IPL 2025 New Schedule: ஐபிஎல் 2025; புதிய அட்டவணை வெளியீடு..!
இருக்கை அரங்கம் திறப்பு:
இந்நிலையில், ரோஹித் சர்மாவின் பெயரில் மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் இருக்கை அரங்கம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இதனை ரோஹித் சர்மா இன்று திறந்து வைத்தார். இதன் காட்சிகள் உங்களின் பார்வைக்கு இணைக்கப்பட்டுள்ளது. இந்திய அணிக்காக பல ஆண்டுகளாக தனது தீராத உழைப்பை வெளிப்படுத்தி வந்த ரோகித்தை பெருமைப்படுத்தும் விதமாக அமைக்கப்பட்ட அரங்கத்தால் ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
ரோஹித் சர்மாவின் பெயரில் இருக்கை அரங்கம்:
Ladies and gentlemen, ROHIT SHARMA STAND at Wankhede 🥺🥺🥺💙 pic.twitter.com/2kePtZYrWq
— Vinesh Prabhu (@vlp1994) May 16, 2025