Ravichandran Ashwin (Photo Credit: @News24eng X)

அக்டோபர் 24, புனே (Sports News): இந்தியா - நியூசிலாந்து (IND Vs NZ 2nd Test) அணி மோதும் 2வது டெஸ்ட் போட்டி இன்று (அக்டோபர் 24) புனேவில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. இந்த போட்டி தொடங்கியவுடன் 7 ஓவர்கள் வரை விக்கெட் விடாமல் நிதானமாக நியூசிலாந்து அணி விளையாடி வந்தது. இதனையடுத்து, அஸ்வின் வீசிய ஆட்டத்தின் 7-வது ஓவரின் 5-வது பந்தில் டாம் லதாமை அவுட்டாக்கினார்.

மேலும், அடுத்து வந்த வில் யங் விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினார். இதன்மூலம், ரவிச்சந்திரன் அஸ்வின் (R Ashwin) உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship) வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை (188) வீழ்த்திய நம்பர் 1 சுழற்பந்துவீச்சாளர் என்ற சாதனையை பெற்றார். இதற்கு முன்பு 187 விக்கெட்டுகளை எடுத்து ஆஸ்திரேலியாவின் மூத்த சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் (Nathan Lyon) இருந்தார். IND Vs NZ 2nd Test: முதல் நாள் மதிய உணவு இடைவேளை; நியூசிலாந்து அணி நிதான ஆட்டம்.. அஸ்வின் அபாரம்..!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அதிக விக்கெட் எடுத்த வீரர்கள்:

1. ரவிச்சந்திரன் அஸ்வின் (இந்தியா) - 188

2. நாதன் லயன் (ஆஸ்திரேலியா) - 187

3. பாட் கம்மின்ஸ் (ஆஸ்திரேலியா) - 175

4. மிட்செல் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா) - 147

5. ஸ்டூவர்ட் பிராட் (இங்கிலாந்து) - 134

மேலும், ஒட்டுமொத்த டெஸ்ட் கிரிக்கெட்டில் விக்கெட் எண்ணிக்கையில் நாதன் லயனை சமன் செய்த அஸ்வின் வில் யங்கின் விக்கெட்டை வீழ்த்திய அஸ்வின், நாதன் லயனின் டெஸ்ட் விக்கெட் எண்ணிக்கையையும் (530) முந்தியுள்ளார். தற்போது, அஸ்வின் 532 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன்மூலம், டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஏழாவது வீரர் என்ற பெருமையை பெற்றார்.

டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் எடுத்த வீரர்கள்:

1. முத்தையா முரளிதரன் (இலங்கை) - 800

2. ஷேன் வார்ன் (ஆஸ்திரேலியா) - 708

3. ஜேம்ஸ் ஆண்டர்சன் (இங்கிலாந்து) - 704

4. அனில் கும்ப்ளே (இந்தியா) - 619

5. ஸ்டூவர்ட் பிராட் (இங்கிலாந்து) - 604

6. கிளென் மெக்ராத் (ஆஸ்திரேலியா) - 563

7. ரவிச்சந்திரன் (இந்தியா) - 532

8. நாதன் லயன் (ஆஸ்திரேலியா) - 530