Ravindra Jadeja at Ashapura Devi Temple: அன்பு மனைவியுடன் ஆஷாபுரா தேவி கோவிலில் சாமி தரிசனம் செய்த ரவீந்திர ஜடேஜா.!
Ravindra Jadeja With Wife Rivaba Jadeja (Photo Credit: Instagram)

ஜூன் 28, குஜராத் (Cricket News): இந்திய கிரிக்கெட் அணியில், சர்வதேச அளவில் கவனிக்கப்படும் வீரர் ரவீந்திர ஜடேஜா (Ravindra Jadeja). ஆல்ரவுண்டரான ஜடேஜா இந்திய அளவில் நடைபெறும் ஐ.பி.எல் தொடரின் மூலமாக, சென்னை அணிக்காக விளையாடி உலகப்புகழ் பெற்றவர்.

தற்போது இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகள் நாட்டுக்கு சென்று, அந்நாட்டு அணியுடன் பலபரீட்சை நடத்தவுள்ளது. வரும் ஜூலை 12ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி வரையில் நடைபெறும் 10 போட்டிகளில் இந்திய அணி கலந்துகொள்ளவுள்ளது. Trending Video: சில நொடிகள் மரத்தை தாக்கிய மின்னல்; பதைபதைப்பு காட்சிகள் கொண்ட வைரல் வீடியோ..!

ரவீந்திர ஜடேஜாவுக்கும் - ரிவபா ஜடேஜாவுக்கும் கடந்த 8 டிசம்பர் 2022 அன்று திருமணம் நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில், தற்போது தம்பதிகள் இருவரும் ஜோடியாக ஆஷாபுரா தேவி கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

இதுகுறித்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள ரவீந்திர ஜடேஜா, "என் நம்பிக்கை, என் வலிமை 🙏🏻" என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு வைரலாகி வருகிறது.