ஜூலை 05, சென்னை (Sports News): ஐசிசி ஆண்கள் டி20 உலகக்கோப்பையுடன் இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி தாயகம் திரும்பி இருக்கிறது. மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் மிகப்பெரிய வெற்றி கொண்டாட்டமும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, இன்று காதுகேளாதோர் (Indian deaf cricket team) கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 5-2 என்ற வரலாற்று வெற்றியுடன் தாயகம் திரும்பி கிரிக்கெட் ரசிகர்களுக்கு இரட்டை மகிழ்ச்சியை அளித்திருக்கிறது.
சென்னையில் உற்சாக வரவேற்பு:
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான காது கேளாதருக்கான கிரிக்கெட் போட்டி இங்கிலாந்து நாட்டில் உள்ள லீசெஸ்டர் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி வரலாற்று வெற்றியடைந்துள்ளது. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மேலும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னை கிரிக்கெட் அணியின் வீரர்கள் சாய் ஆகாஷ், இந்திய காது கேளாதோர் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் சுதர்சன் ஆகியோருக்கு சென்னை விமான நிலையத்தில் (Chennai Airport) பெற்றோர்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. Team India singing Vande Mataram: ரசிகர்களுடன் விண்ணைப்பிளக்க 'வந்தே மாதரம்' பாடி, மெய்சிலிர்க்கவைத்த இந்திய கிரிக்கெட் அணி.! அதிர்ந்துபோன வான்கடே மைதானம்.!
சோதனைகளை கடந்து சாதனை படைத்த தமிழர்கள்:
சாய் ஆகாஷ் மூன்று முறை அரை சதங்களை அடித்து நொறுக்கினார். ஏழு போட்டிகளில் 271 ரன்கள் குவித்த அவர் தொடர் நாயகனாகவும் விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டார். தனது எட்டு வயதில் இருந்து ஆகாஷ் கிரிக்கெட் விளையாடி வந்த நிலையில், தொடர்ந்து உச்சத்தில் தள்ளி இருக்கிறது. திருவான்மீரை பூர்வீகமாக கொண்டவரின் வெற்றி தேசிய அளவில் கவனிக்கப்பட்டு, தற்போது தனது பங்களிப்பை திறம்பட வெளிப்படுத்தி வருகிறார்.
அதேபோல, கொளத்தூர் பகுதியை சார்ந்த சுதர்சன் தனது 7 வயதில் இருந்து கிரிக்கெட் மீதான ஆர்வம் கொண்டு செயல்பட்டு இன்று வெற்றியை தனதாக்கி இருக்கிறார். எளிமையான குடும்பத்தைச் சார்ந்த இவர்கள் இருவரும் தற்போது இந்தியா மட்டுமல்லாது உலகம் கவனிக்கும் வகையில் செயல்பட்டு இருக்கின்றனர். அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
VIDEO | Members of the Indian deaf cricket team receive warm welcome as they arrive at #Chennai airport. The Indian deaf cricket team defeated hosts England 5-2 in a seven match T20 series earlier this week.
(Full video available on PTI Videos - https://t.co/n147TvqRQz) pic.twitter.com/a4uLluZIla
— Press Trust of India (@PTI_News) July 5, 2024