ஜூலை 05, மும்பை (Sports News): ஐசிசி ஆண்கள் T20 உலகக்கோப்பை (T20 World Cup 2024) கிரிக்கெட் போட்டியில், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வெற்றி அடைந்தது. தொடக்கத்தில் இருந்து டி20 போட்டியில் தனது திறமையை வெளிப்படுத்தி வந்த இந்திய அணி, இறுதிப்போட்டியில் மிகப்பெரிய பரபரப்புடன் விளையாடி வெற்றியை தனதாக்கியது. இந்த போட்டியை தொடர்ந்து, போட்டி நடைபெற்ற மேற்கிந்திய - கரீபியன் தீவுகளை புயல் தாக்கியதால் இந்திய அணி தாயகம் வர தாமதமானது. Water Canon Salute To Team India flight: மும்பை வந்த இந்திய அணி.. நீரைத் தீட்டி வரவேற்ற விமானத் துறையினர்..!
மும்பையில் பிரம்மாண்ட சாலை பேரணி:
நேற்று இந்திய கிரிக்கெட் அணி டெல்லி வந்தடைந்த நிலையில், ஐடிசி மயூரியா விடுதிக்கு சென்றுவிட்டு பின் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வாழ்த்துபெற்றது. அதனைத்தொடர்ந்து, மும்பை புறப்பட்டு வந்த இந்திய கிரிக்கெட் அணிக்கு, விமான நிலைய அதிகாரிகள் சார்பில் நீரை பாய்ச்சி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின் மும்பை வான்கடே மைதானம் வரை சாலை பேரணியாக வந்த இந்திய கிரிக்கெட் அணி, மைதானத்தில் நடந்த வெற்றி கொண்டாட்டத்தில் கலந்துகொண்டது.
வந்தே மாதரம் (Vande Mataram) பாடி அசத்தல்:
அங்கு இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ.125 கோடி பரிசுத்தொகையும் வழங்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு அத்தொகையை பிரித்து வழங்கவும் பிசிசிஐ ஏற்பாடு செய்துள்ளது. இதனிடையே, மைதானத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள், வந்தே மாதரம் பாடல் ஒலிக்கும்போது, அதனை பின்னணியில் உணர்ச்சிபொங்க பாடி ரசிகர்களின் கோஷத்துடன் தங்களை இணைத்து மெய்சிலிர்க்க வைத்தனர். இந்த காணொளி வெளியாகி வைரலாகி வருகிறது.
GOOSEBUMPS GUARANTEED...!!!! 😍
- Team India singing 'Vande Maataram' with Wankhede crowd. pic.twitter.com/SfrFgWr4x9
— Mufaddal Vohra (@mufaddal_vohra) July 4, 2024