ஏப்ரல் 12, அருண் ஜெட்லீ கிரிக்கெட் மைதானம் (Sport News): 2023ம் ஆண்டுக்கான 15வது சீசன் ஐ.பி.எல் (IPL 2023) தொடர், கடந்த மார்ச் மாதம் குஜராத்தில் (Gujarat) தொடங்கியது. நேற்றைய 16வது ஆட்டத்தில் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லீ கிரிக்கெட் மைதானத்தில், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் - மும்பை இந்தியன்ஸ் (Delhi Capitals Vs Mumbai Indians) அணியும் விளையாடின.
இந்த ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்ற மும்பை (MI Team) அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதனால் பேட்டிங் செய்ய களமிறங்கிய டெல்லி அணி (DC Team), ஆட்டத்தின் இறுதியில் 19.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 172 ரன்கள் எடுத்தது. பந்துவீச்சில் அசத்திய மும்பை அணியில் ஜேசன், பியூஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். ரிலே 2 விக்கெட்டை எடுத்தார். DigiDog: மீட்பு பணிகள், அவசர காலத்தில் உதவி செய்ய நாய்கள் உருவிலான ரோபோட்… அசத்தல் கண்டுபிடிப்புகள்.!
அதனைத்தொடர்ந்து, பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் சரியாக 173 ரன்கள் எடுத்து வெற்றி அடைந்தது. இது ஐ.பி.எல் சீசனில் மும்பை அணிக்கு கிடைத்த முதல் வெற்றி ஆகும். மும்பை அணியின் சார்பில் விளையாடிய ரோஹித் ஷர்மா (Rohit Sharma) 45 பந்துகளில் 65 ரன்களும், திலக் வர்மா 29 பந்துகளில் 41 ரன்களும் எடுத்திருந்தனர்.
6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி அடைந்தது. நேற்று நடைபெற்ற மும்பை மற்றும் டெல்லி ஆட்டத்தின் இறுதியை சுமார் 1.7 கோடி பயனர்கள் நேரலையில் கண்டு ரசித்தனர்.
1.7 Crores people watching when Mumbai Indians won the match against Delhi Capitals. pic.twitter.com/79hP4eYUuX
— CricketMAN2 (@ImTanujSingh) April 11, 2023