Ajith Pawar | NCP Party Flag | Sarath Pawar (Photo Credit: Twitter / Wikipedia)

ஏப்ரல் 19, மும்பை (Maharashtra Politcs): மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது ஏக்நாத் ஷிண்டேவின் (Eknath Shinde) கட்டுப்பாட்டில் இருக்கும் சிவசேனா - பாஜக தலைமையிலான (Shiv Sena BJP Alliance) கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் பாஜக - சிவசேனா கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன.

தேர்தல் முடிவுக்கு பின்னர் சிவசேனா சார்பில் உத்தவ் தாக்கரே (Uddhav Thackeray) முதல்வர் பதவி கேட்க, அதனை வழங்க மறுத்த பாஜக-வால் இருவருக்கும் இடையே பிரிவு ஏற்பட்டு, சிவசேனா கட்சி தனது கொள்கைக்கு அறவே ஒவ்வாத தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றியது.

இதனிடையே தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஜித் பவார் (Ajith Pawar), பாஜகவுடன் திடீரென நெருங்கி ஆட்சியை கைப்பற்ற ஆளுநரிடம் மனு வழங்கி வந்தார். ஆனால், அஜித் பவாருக்கு பின் எம்.எல்.ஏக்கள் செல்லவில்லை என்பதால் அம்முயற்சி தோல்வியை சந்தித்தன. இதனிடையே, சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கட்சிகள் சேர்ந்து ஆட்சியை அமைத்தன. SRH Vs MI: 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடிய மும்பை அணி.. சொந்த மண்ணில் சுருண்ட ஹைதராபாத்..!

கடந்த சில மாதங்களுக்கு முன் சற்றும் எதிர்பாராத திருப்பமாக சிவசேனா கட்சி என்னிடம் உள்ளது என அக்கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்து, ஆட்சியை பாஜகவுடன் சேர்ந்து கைப்பற்றினார். இதனால் அம்மாநில அரசியல் மீண்டும் பரபரப்பானது. தற்போது அம்மாநில முதல்வராக ஏக்நாத் ஷிண்டேவும், துணை முதல்வராக பாஜகவின் தேவேந்திர பட்நாவிசும் இருக்கின்றனர்.

இந்நிலையில், தேசியவாத காங்கிரசை கைக்குள் வைத்திருக்கும் அஜித் பவார், தனது தரப்பு எம்.எல்.ஏக்களுடன் பாஜகவில் இணையவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனை மறுத்துள்ள அஜித் பவார், "இவை அனைத்தும் ஆதாரமற்ற மற்றும் தவறான வதந்திகள். இதுபோன்ற வதந்திகளை நிறுத்துமாறு அனைவருக்கும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன்

என்னைப் பற்றி பல வதந்திகள் பரவின. அவை உண்மையில்லை. நான் தேசியவாத காங்கிரசில் (NCP) இருக்கிறேன். அக்கட்சியிலேயே இருப்பேன். நான் எந்த எம்.எல்.ஏ.க்களிடமும் கையெழுத்து வாங்கவில்லை" என கூறினார்.