ஏப்ரல் 16, பெங்களூர் (Sports News): 2024 ஐபிஎல் (IPL 2024) தொடரின் 30 ஆவது ஆட்டம் நேற்று கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியும் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்(SRH Vs RCB) அணியும் மோதிக்கொண்டன. ஆட்டத்தின் தொடக்கத்தில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, திரம்பட விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தி புதிய சாதனை படைத்தது. பெங்களூர் அணியின் பந்துவீச்சு ரசிகர்களை மட்டுமல்லாது, அணியின் வீரர்களையும் ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியது.
அசத்திய ஹைதராபாத் அணி: முதல் பகுதியின் ஆட்ட முடிவில் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்கள் குவித்து மிகப்பெரிய சாதனை படைத்தது. அந்த அணியின் சார்பில் விளையாடியவர்களில் டார்விஸ் ஹெட் 41 பந்துகளில் 102 ரன்கள் அடித்திருந்தார். கால்சன் 31 பந்துகளில் 67 ரன்னும், அப்துல் சமீத் 10 பந்துகளில் 37 ரன்னும் அடித்திருந்தனர். இதனால் 288 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணியின் ஆட்டக்காரர்கள், அடுத்தடுத்த விக்கெட்டை இழந்து திணறிப்போயினர். Bus Fall off from NH Bridge: பாலத்தில் இருந்து கீழே விழுந்த பேருந்து: மதுபோதையில் பேருந்தை இயக்கிய ஓட்டுனரால் 5 பயணிகள் பலி., 38 பேர் படுகாயம்..!
போராடி தோற்ற பெங்களூர் அணி: தொடக்கத்தில் களமிறங்கிய விராட் கோலி (42) மற்றும் டூ பிளசிஸ் (62) ஜோடி 104 ரன்கள் அடித்து அவுட் ஆகி வெளியேறினர். அதனைத்தொடர்ந்து தினேஷ் கார்த்திக் நின்று விளையாடி 35 பந்துகளில் 83 ரன்கள் எடுத்து அசத்தியிருந்தார். எஞ்சிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினாலும், தனது இலக்கை நெருங்க பெங்களூர் அணி மிகப்பெரிய போராட்டத்தை நடத்தி இருந்தது. 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழந்த பெங்களூர் அணி, இலக்கை எட்ட முடியாமல் 262 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. இதனால் ஹைதராபாத் அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
உச்சகட்ட கோபத்தில் விராட்: ஹைதராபாத் அணியின் சார்பில் விளையாடிய பேட் கம்மின்ஸ், தான் வீசிய 4 ஓவர்களில் மூன்று விக்கெட் எடுத்து அசத்தியிருந்தார். நேற்றைய ஆட்டத்தின் நாயகனாக ஹைதராபாத் அணியை சார்ந்த டார்விஸ் ஹெட் தேர்வு செய்யப்பட்டார். இந்த போட்டியில் அணியின் செயல்பாடு காரணமாக விரக்தி மற்றும் ஆத்திரமடைந்த விராட் கோலி, மைதானத்திலேயே தனது முகபாவனையை மாற்றி ஆத்திரத்தின் உச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்தி இருந்தார்.
அணியின் செயல்பாடு காரணமாக ஆத்திரத்தில் விராட் கோலி:
Everyone’s Mental Health after Watching RCB Bowling 🥹#RCBvsSRH #rcbbowlers #ViratKohli #RCB pic.twitter.com/6EPzEuF1PY
— Tanay (@tanay_chawda1) April 15, 2024