ஏப்ரல் 09, சென்னை (Sports News): ஐபிஎல் 2024 (IPL 2024) கிரிக்கெட் தொடரில், மார்ச் 08ம் தேதியான நேற்று, 22 ஆவது போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (CSK Vs KKR) அணிகளுக்கு இடையே நடைபெற்றது. சென்னையில் உள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று 07:30 மணியளவில் தொடங்கிய ஆட்டத்தில், முதலில் கொல்கத்தா அணி பேட்டிங் செய்தது. 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழந்த கொல்கத்தா அணி, 137 ரன்கள் மட்டுமே சேர்த்து இருந்தது.
அசத்திய சென்னை அணி: அந்த அணியின் சார்பில் விளையாடியவர்களில் சுனில் 20 பந்துகளில் 27 ரன்னும், அக்ரிஷ் ரகுவன்சி 18 பந்துகளில் 24 ரன்னும், ஸ்ரேயாஸ் ஐயர் 32 பந்துகளில் 34 ரன்னும் அதிகபட்சமாக அடித்திருந்தனர். பிற அனைவரும் சொற்பரன்களில் வெளியேறிவிட, கொல்கத்தா அணியால் 137 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. இதனையடுத்து, மறுமுனையில் 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியின் ஆட்டக்காரர்கள், அடுத்தடுத்து அதிரடியாக ஆடியதால் அணி வெற்றி பெற்றது. Thalapathy Vijay Spiritual Temple Visit: அப்பாவைப் பார்க்க போன அண்ணா.. தலைவர் விஜய் சாய்பாபா கோவிலில் தரிசனம்..!
ஜடேஜாவின் அசத்தல் பந்துவீச்சு: சென்னை அணியின் சார்பில் விளையாடியவர்களில் ருத்ராஜ் 58 பந்துகளில் 67 ரன்கள் அடித்து விளாசி இருந்தார். டேரில் மிட்செல் 19 பந்துகளில் 25 ரன்னும், சிவம் டுயூப் 18 பந்துகளில் 28 ரன்னும் அடித்திருந்தனர். தோனி இறுதியில் களமிறங்கி 3 பந்துகளில் 1 ரன்கள் மட்டும் எடுத்திருந்தார். 17.4 ஓவர் முடிவில் சென்னை அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் எடுத்து வெற்றி அடைந்தது. சென்னை அணியின் சார்பில் ஜடேஜா சிறந்த ஆட்டக்காரராகவும் தேர்வு செய்யப்பட்டார். அவர் வீசிய 4 ஓவரில், மூன்று விக்கெட்டை கைப்பற்றி 18 ரன்கள் மட்டுமே அடிக்க அனுமதித்து இருந்தார்.
இந்நிலையில், போட்டியின் போது தோனி சிவமின் விக்கெட்டுக்கு பின்னர் களமிறங்கிய நிலையில், ஜடேஜா தான் களமிறங்கப் போவதாக பாவனையை செய்து பின் தோனிக்கு வழி கொடுத்தார். இது குறித்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
Moment of yesterday! Jaddu teases the crowd and then make way for Thala. 🤭🔥#MSDhoni #CSKvKKR #TATAIPL #IPL2024 #BharatArmy pic.twitter.com/Y6PMOt3el8
— The Bharat Army (@thebharatarmy) April 9, 2024