KKR IPL 2024 (Photo Credit: @IPL X)

மே 22, அகமதாபாத் (Cricket News): 2024 ஐபிஎல் சீசன் (IPL 2024) தொடர் தனது இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டது. புள்ளிப்பட்டியலின்படி முதல் தகுதி சுற்றில் நேற்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (SRH Vs KKR) அணிகள் குஜராத்தில் உள்ள அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் வைத்து தங்களுக்கு இடையே பலப்பரிட்சை நடத்தியது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி, 159 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அந்த அணியின் சார்பில் விளையாடியவர்களில் தொடக்க ஆட்டக்காரர்களான டார்விஸ் கெட், அபிஷேக் ஷர்மா ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்த நிலையில், ராகுல் த்ரிபாதி 35 பந்துகளில் 55 ரன்கள் நின்று அடித்தார். பின் அடுத்தடுத்து விக்கெட் சரிய அணியால் மொத்தமாக 159 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது. Singapore Airlines Turbulence Horror: நடுவானில் காற்று சுழற்சியால் நிலைகுலைந்த விமானம்; ஒருவர் பலி., 30 பேர் படுகாயம்..! 7000 அடி உயரத்தில் மரண பீதியில் அலறிய மக்கள்.! 

கொல்கத்தா அணி அசத்தல் வெற்றி: கொல்கத்தா அணியின் சார்பில் விளையாடியவர்களில் மிச்சல் ஸ்டார்க் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருந்தார். வருண் சக்கரவர்த்தி இரண்டு விக்கெட்டை கைப்பற்றினார். இதனையடுத்து, 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அனைவரும், அதிரடியாக அடித்தாடியதைத்தொடர்ந்து அணியின் வெற்றி வசமானது. அந்த அணியின் சார்பில் விளையாடியவர்களில் ரஹ்மானுல்லா 14 பந்துகளில் 23 ரன்களும், சுனில் நரேன் 16 பந்துகளில் 21 ரன்களும், வெங்கடேஷ் ஐயர் 28 பந்துகளில் 51 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 24 பந்துகளில் 58 ரன்களும் எடுத்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். இந்த ஆட்டத்தின் முடிவில் 13.4 ஓவரில் இரண்டு விக்கெட்டை இழந்த கொல்கத்தா அணி 164 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

எலிமினேட்டர் போட்டி: இன்று ராஜஸ்தான் மற்றும் பெங்களூர் (Rajasthan Vs Bangalore Eliminator Match 2024) அணிகள் மோதிக்கொள்ளும் எலிமினேட்டர் சுற்று அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. அதனைத்தொடர்ந்து, அதில் வெற்றி பெறும் அணி இரண்டாவது தகுதி சுற்றில் ஹைதராபாத் அணியுடன் மோதி, அதில் வெற்றிவேல் அடையும் அணி இறுதிப்போட்டியில் கொல்கத்தா அணியுடன் மோதும். இறுதிப்போட்டி சென்னையில் உள்ள மா சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. இதனை வீட்டில் இருந்தபடி ஜியோ சினிமா (Jio Cinema) செயலியில் இலவசமாகவும் கண்டுகளிக்கலாம். நேற்றைய ஆட்டத்தின் பல திருப்புமுனைகள் குறித்த ஹைலைட்கள் இத்துடன் இணைக்கப்பட்டன.

வெற்றிகொண்டாட்டத்தில் ராஜஸ்தான்:

மகிழ்ச்சியில் ஷாருக்கான்:

அடித்து ஆடிய ஹைதராபாத்: