ஏப்ரல் 14, மொஹாலி (Cricket News): ஐபிஎல் 2024 (IPL 2024) தொடரின் 27வது ஆட்டம், நேற்று மொஹாலியில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி (RR Vs PBKS) - பஞ்சாப் கிங்ஸ் அணி இடையே நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்திருந்தது. அந்த அணியின் சார்பில் விளையாடியவர்களில் அதிகபட்சமாக அ. ஷர்மா 16 பந்துகளில் 31 ரன்கள் அடித்து அசத்தி இருந்தார். Aranmanai 4: பேயின் மிரட்டல் சம்பவத்துக்கு தயாரா?.. அரண்மனை 4 ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு.! 

PBKS IPL 2024 (Photo Credit: @IPL X)

அசத்தல் வெற்றிபெற்ற ராஜஸ்தான்: இதனையடுத்து, மறுமுனையில் 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி, முதலில் சற்று தடுமாறினாலும் இறுதியில் அசத்தல் வெற்றியை அடைந்தது. அந்த அணியின் சார்பில் விளையாடியவர்களில் ஷிமரோன் ஹெட்மேயர் 10 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து இறுதிக்கட்டத்தில் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றார். ராஜஸ்தான் அணி தோல்வியை தழுவிடுமோ என்ற பதைபதையில் இருந்த ரசிகர்களை ஹெட்மேயர் உற்சாகத்தின் இறுதிக்கட்டத்திற்கு அழைத்து சென்று வெற்றியை அளித்திருந்தார். ஆட்டத்தின் முடிவில் 19.5 ஓவரில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது.

அசத்திய ஷிமரோன் ஹெட்மேயர்:

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நாயகனாக ஷிமரோன்: