Aranmanai 4 Poster (Photo Credit: @Rameshlaus X)

ஏப்ரல் 14, சென்னை (Cinema News): திகில் காட்சிகள் மற்றும் அமானுஷ்ய அனுபவம் கொண்ட பேய் படங்களுக்கு, தமிழில் வரவேற்பு என்பது அதிகம். அந்த வகையில், இயக்குனர் மற்றும் நடிகர் என பன்முகத்துடன் வலம்வரும் சுந்தர் சியின் இயக்கம் & நடிப்பில் மூன்று பாகங்களாக வெளியான அரண்மனை திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. மூன்று பாகங்களில் முதல் இரண்டு பாகம் ஏகபோக வெற்றியை அடைந்தது.

அரண்மனை 4 (Aranmanai 4) பாகம்: தற்போது அரண்மனை திரைப்படத்தின் 4வது பாகம் வெளியாகவுள்ளது. பழைய பாணியை போல, காமெடி மற்றும் திகில் நிறைந்த கதையம்சத்துடன் சுந்தர் சி இயக்கம் மற்றும் நடிப்பில் தயாராகியுள்ள அரண்மனை 4 திரைப்படம், குஷ்புவின் அவினி சினிமேக்ஸ் நிறுவனத்தால் தயாரித்து வெளியிடப்படுகிறது. பென்னி ஓலிவர் எடிட்டிங்கில், ஹிப் ஹாப் தமிழா (Hip Hop Tamizha Aadi) ஆதி இசையில் உருவாகியுள்ள இப்படம், முன்னதாக ஏப்ரல் 11ம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. Firing Near Salman Khan's House: நடிகர் சல்மான்கானின் வீட்டருகே துப்பாக்கி சூடு: பரபரப்பில் பாலிவுட் திரையுலகம்..! 

நடிகர்-நடிகைகள்: இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சுந்தர் சி, தமன்னா, ராசி கண்ணா, சந்தோஷ் பிரதாப், கோவை சரளா, யோகி பாபு, ராஜேந்திரன், சிங்கம் புலி, டெல்லி கணேஷ் உட்பட பலரும் நடித்துள்ளனர். கடந்த 2023 ஆம் ஆண்டில் கேரளாவின் கொச்சி மற்றும் பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் விறுவிறுப்புடன் நடைபெற்று வந்த படப்பிடிப்பு நிறைவடைந்து, படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான டிரைலரும் நல்ல வரவேற்பை பெற்றது.

வெளியீடு தேதி அறிவிப்பு: இந்நிலையில், அரண்மனை படத்தின் 4வது பாகம் ஏப்ரல் மாதம் 26ம் தேதி திரைக்கு வருகிறது. இந்த அறிவிப்பு தயாரிப்பு நிறுவனத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் அரண்மனை படம் வெளியாகும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் அரண்மனை 4 படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.