மார்ச் 06, மும்பை (Cricket News): கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கும், ஐ.பி.எல் 2024 (IPL 2024) கிரிக்கெட் தொடர் மார்ச் மாதம் 22ம் தேதி முதல் கோலாகலமாக கொண்டாட்டங்களுடன் தொடங்கவுள்ளது. சென்னையில் உள்ள சேப்பாக்கம், சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கும் நடப்பு ஐபிஎல் சீசனுக்கான முதல் ஆட்டத்தில் சென்னை (CSK Vs RCB) சூப்பர்கிங்ஸ் அணியும் - ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதிக்கொள்கின்றன.
சிஎஸ்கே நிர்வாகத்தின் வீடியோ: இந்த ஆட்டத்தை கொண்டாட்டங்களுடன் நேரில் காணுவதற்கு சென்னை - பெங்களூர் அணியின் கிரிக்கெட் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். போட்டியை முன்னிட்டு பயிற்சி பெறுவதற்கு தற்போதில் இருந்து இருதரப்பு கிரிக்கெட் அணியை சேர்ந்தவர்களும் அடுத்தடுத்து தமிழகம் வந்தவண்ணம் இருக்கின்றனர். சென்னைக்கு தல தோனி வந்ததை உறுதி செய்து, அவரை வரவேற்கும் விதமாக சென்னை சூப்பர்கிங்ஸ் அணி நிர்வாகம், லியோ திரைப்பட பாணியில் வீடியோ ஒன்றையும் இன்று காலை வெளியிட்டு ஆரவாரத்தை அதிகரித்து இருந்தது. Oman Flood: திரைப்படத்தை மிஞ்சிய காட்சி: திடீரென வீதியில் கரைபுரண்டு ஓடிய வெள்ளம்.!
இலவசமாக பார்க்க: நடப்பு ஐபிஎல் 2024 சீசனை ஜியோ (Jio Cinema) சினிமாவில் நேரலையில் இலவசமாக காணுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் போட்டி தொடங்கும் நாள் முதல் நேரில் காண இயலாதவர்கள், தங்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் ஜியோ சினிமா வாயிலாக வீட்டில் கண்டுகளிக்க தயாராகி வருகின்றனர். சென்னை, சேலம், மதுரை போன்ற பெருநகரங்களில் இருப்போர், தற்போதில் இருந்தே தங்களது நண்பர்களின் வீட்டில் அதற்கான ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.
விளம்பர வீடியோவில் வயதானவர் தோற்றத்துடன் தோனி: இந்நிலையில், தனது இலவச நேரடி ஒளிபரப்பு சேவையை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பொருட்டு, ஜியோ சினிமா தரப்பு தோனியின் வாயிலாக விளம்பர வீடியோ ஒன்றை பகிர்ந்து இருக்கிறது. இந்த வீடியோவில் தோனி இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். வயதானவர் தோற்றத்திலும் அவர் நடித்துள்ளது ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. வயதானவர் தோற்றத்தில் நடித்தாலும், அவரின் செயல்பாடுகள் சுறுசுறுப்பை மட்டுமே பிரதிபலிக்கிறது.
தற்போது வரை தல தோனியை இளமையாகவும், சுறுசுறுப்பாகவும் பார்த்து பழகிய ரசிகர்களுக்கு அவரின் வயதானவர் தோற்றம், தோனிக்கு ஆண்டுகள் கழித்து வயதாகும் போது அவர் எப்படி இருப்பார் என்பதையும் பிரதிபலிக்கிறது. கடந்த ஐபிஎல் தொடர் ஒளிபரப்பு செய்யப்படும்போதும் ஜியோ சினிமா இலவச சேவையை வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.