ஏப்ரல் 11, பெங்களூரு (Sports News): 2025 ஐபிஎல் (IPL 2025) தொடரில் நேற்று நடைபெற்ற 24வது லீக் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு-டெல்லி கேபிட்டல்ஸ் (RCB Vs DC) அணிகள் விளையாடின. இதில், முதலில் களமிறங்கிய ஆர்சிபி அணி 7 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் அடித்தது. இதனையடுத்து களமிறங்கிய டெல்லி அணி 18வது ஓவரில் சேஸ் செய்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. Captain MS Dhoni: மீண்டும் சென்னை அணியின் கேப்டனாக எம்எஸ் தோனி? தொடரில் இருந்து வெளியேறிய ருத்ராஜ்?..!
ஆக்ரோஷமான கொண்டாட்டம்:
டெல்லி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக கேஎல் ராகுலின் (KL Rahul Aggressive Celebration) அதிரடி ஆட்டம் இருந்தது. கேஎல் ராகுல், கடைசி வரை களத்தில் நின்று 93 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருதை பெற்று சென்றார். இப்போட்டியில், சிக்ஸர் அடித்து அணியை வெற்றிபெற வைத்ததை தொடர்ந்து, தனது பேட்டை கீழே சுற்றி இது இன்னுடைய மைதானம் என்பது போல சைகை காட்டி வெற்றியை கொண்டாடினார். அவர் கொண்டாடிய விதம், தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது
மனம் திறந்த கேஎல் ராகுல்:
இதுகுறித்து பேசிய அவர், 'எனக்கு எப்போதுமே பெங்களூர் மைதானம் மிகவும் பிடித்த மைதானம். இங்குதான் நான் சிறுவயதில் இருந்தே விளையாடி வருகிறேன். எனது ஐபிஎல் பயணத்தை இங்குதான் ஆரம்பித்தேன். இங்கு விளையாடுவது எப்போதும் எனக்கு வீடு திரும்புவது போல உணர்வைத் தருகிறது. இப்போட்டியில் வெற்றி பெற்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. போட்டியில் நான் சிறப்பாக விளையாடி அணி வெற்றி பெற்ற காரணத்தால், எனக்கு பிடித்த 'காந்தாரா' படத்தில் இடம்பெற்ற கொண்டாடட்டதை வைத்து கொண்டாடினேன் என கேஎல் ராகுல் தெரிவித்தார்.
வீடியோ இதோ:
That KL Rahul's Celebration was from the Movie Kantara
.
.#KLRahul #IPL2025 pic.twitter.com/rEBPxVCMnc
— FOMO7Games (@FOMO7official) April 11, 2025