
மே 22, அகமதாபாத் (Sports News): டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025)தொடரில், இன்று (மே 22) குஜராத் டைட்டன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இப்போட்டி, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. குஜராத் அணி டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி, முதலில் களமிறங்கிய லக்னோ அணிக்கு மிட்செல் மார்ஷ் - ஐடன் மார்க்கரம் ஜோடி சிறப்பான தொடக்கம் கொடுத்தது. GT Vs LSG: மிட்செல் மார்ஷ் அதிரடி சதம்.. குஜராத் பந்துவீச்சை வெளுத்து வாங்கிய பூரன்.., 236 ரன்கள் இலக்கு..!
டைட்டன்ஸ் எதிர் சூப்பர் ஜெயிண்ட்ஸ் (Gujarat Titans Vs Lucknow Super Giants):
முதல் விக்கெட்டுக்கு 91 ரன்கள் சேர்த்த நிலையில், மார்க்கரம் 36 ரன்னில் அவுட்டானார். மார்ஷ், ஐபிஎல் தொடரில் முதல் முறையாக சதமடித்து (117 ரன்கள்) அசத்தினார். பூரன் அதிரடியாக விளையாடி அரைசதம் (56*) கடந்தார். ரிஷப் பந்த் 6 பந்தில் 16 ரன்கள் அடித்தார். இறுதியில், லக்னோ அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 235 ரன்கள் குவித்தது. குஜராத் அணி 236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மெகா இலக்கை துரத்தியது.
லக்னோ வெற்றி:
குஜராத் அணிக்கு கில்-சாய் சுதர்சன் ஜோடி அதிரடியான தொடக்கம் கொடுத்தது. இருப்பினும், சாய் 21, கில் 35, பட்லர் 33 ரன்களில் அவுட்டாகி பெவிலியின் திரும்பினர். இதனையடுத்து, ரூதர்போர்டு - ஷாருக்கான் ஜோடி அதிரடியாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டது. இந்நிலையில், ரூதர்போர்டு 38, அடுத்து வந்த திவேதியா 2, அர்ஷத் கான் 1 ரன் என அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்தனர். தனி ஆளாக போராடிய ஷாருக்கான் 57 ரன்களில் அவுட்டானார். இறுதியில், குஜராத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 202 ரன்கள் அடித்து, 33 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.