மே 30, அகமதாபாத் (Cricket News): குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நகரில் இருக்கும் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில், நேற்று சென்னை - குஜராத் அணிகள் இடையே இந்திய பிரீமியர் லீக் இறுதி போட்டி நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் எடுத்தது. சென்னை அணி பேட்டிங்கை தொடங்கியபோது மழை குறுக்கிட்டு, இறுதியில் டி.எல்.எஸ் முறையில் ஆட்டம் நடைபெற்று 15 ஓவரில் 175 ரன்கள் அடித்த சென்னை அணி வெற்றி அடைந்தது. Dhoni Gets Emotional: வெற்றியால் ஆனந்தக்கண்ணீரில் நனைந்த தல தோனி.. நெகிழ்ச்சியூட்டும் நிகழ்வு.. ஐபிஎல் 2023 சுவாரஷ்யங்கள்.!

ஆட்டத்தின் போது சென்னை அணி சார்பில் பந்துவீசிய தீபக் சாஹர், தனது கைகளுக்கு வந்த 2 முதல் 3 விக்கெட்டுகளை தவறவிட்டார். இதனால் சென்னை அணி அதிக விக்கெட்டுகளை எடுக்க இயலாமல் போனது.

போட்டியின் இறுதியில் சென்னை அணி வெற்றி அடைந்தாலும், தீபக்கின் செயல்பாடுகள் அதிருப்தியில் இருந்த தல தோனி, தீபக் ஆட்டோகிராப் கேட்கும் போது அதனை கூறி கண்டித்து பின் ஆட்டோகிராப் போட்டு தந்தார். இந்த வீடியோ வெளியாகியுள்ளது.