மே 29, குஜராத் (Cricket News): 2023 ஐ.பி.எல் தொடர் நேற்று நள்ளிரவுடன் கோலாகலமாக நிறைவு பெற்றது. குஜராத் மண்ணில் அகமதாபாத் மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதிக்கொண்ட ஆட்டத்தில், சென்னை அணி தனது இலக்கை எட்டி வெற்றி அடைந்தது.

இந்த வெற்றியை பல மாநிலங்களில் இருந்து குஜராத் சென்ற சென்னை அணியின் ரசிகர்கள் ஆரவாரத்துடன் கொண்டாடி தீர்த்தனர். சென்னை அணியின் வெற்றியின்போது அகமதாபாத் கிரிக்கெட் மைதானமே ரசிகர்களின் ஆரவாரத்தால் அதிர்ந்துபோனது. தமிழக்கத்திற்கு சென்னை அணி வரும் நாளை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கின்றனர். CSK Fans Dancing: வைரங்களின் பூமியில் தெரிக்கவிடும் மஞ்சள் படை.. சென்னை வெற்றியை ஆட்டம் ஆடி கொண்டாடும் ரசிகர்கள்..! 

IPL 2023 | CSK Vs GT | CSK Fan Girl Emotional CSK Victory (Photo Credit: Twitter)

இந்த நிலையில், போட்டியின் போது இறுதியில் ஜடேஜா (Jadeja) 2 பந்துகளில் 10 ரன்கள் அடித்தது தோனியின் மாயாஜாலத்தை வெளிப்படுத்தியது. தோனி (MS Dhoni) களமிறங்க வேண்டும் என்பதற்காக ரசிகர்கள் பலரும் முந்தைய ஆட்டங்களில் ஜடேஜாவை அவுட்டாக சொல்லி கோஷமிட்டனர். இதுகுறித்த மறைமுக கருத்தை ஜடேஜாவும் முன்வைத்து இருந்தார்.

ஆனால், இதுகுறித்து எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்காத தல தோனி, என்றும் நாயகன் என்பதை மீண்டும் நிரூபணம் செய்ய இளம் வீரருக்கு வழிவிட்டு ஒரே பந்தில் அவுட்டாகி ஜடேஜாவை களமிறக்கி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்லவைத்தார்.