
டிசம்பர் 24, சென்னை (Chennai): ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடர் மார்ச் மாதம் 24ம் தேதி தொடங்கி மே மாதம் 29ம் தேதி வரை நடக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சமீபத்தில் ஐபிஎல் ஏலமும் பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்தது. தற்போது ஐபிஎல் போட்டிகளுக்காக அணியினர் முழுவீச்சில் தயாராகும் நேரம் நெருங்கி இருக்கிறது.
2023 ஐபிஎல் கோப்பை வெற்றி: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நடப்பாண்டும் எம்.எஸ் தோனி கேப்டனாக இருந்து வழிநடத்துகிறார். அவரின் தலைமையிலான அணி ஏலத்திற்கு பின் கூடுதலாக பலம் சேர்ந்துள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023 ஐபிஎல் போட்டியின் வெற்றிக்கு பின்னர், தோனி மூட்டில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்ட நிலையில், தற்போது அவர் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும், விரைவில் அவர் வீட்டில் இருந்தவாறு தனது பயிற்சியை தொடங்க இருப்பதாகவும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை நிர்வாக அதிகாரி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். Actor Bonda Mani Passed Away: பிரபல நகைச்சுவை நடிகர் உடல்நலக்குறைவால் காலமானார்: தொடர் சிகிச்சை பலனின்றி சோகம்.!

ஐபிஎல் 2024க்கு தயாராகும் தோனி: இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில், மார்ச் மாதம் 22 ஆம் தேதிக்கு முன்னதாக சென்னை அணி மைதானங்களில் நேரடியாக வந்து பயிற்சியை தொடங்கும். தோனி தனது வீட்டில் தற்போது இருந்து பயிற்சியை தொடங்குகிறார். அவருக்கு மூட்டில் ஏற்பட்ட அறுவை சிகிச்சை அனைத்தும் நிறைவு பெற்று, தற்போது அவர் நல்ல உடல் நலத்துடன் இருந்து வருகிறார். ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சியும் மேற்கொள்கிறார். கிரிக்கெட்டில் அவரின் எதிர்காலம் குறித்த பதிலை அவரே உங்களுக்கு சொல்லுவார்" என தெரிவித்தார்.
பலம் சேர்ந்த சென்னை அணி: சென்னை அணி தற்போதைய ஏலத்தில் ஷர்துள் தாகூர், சச்சின் ரவிந்திரா, டார்யல் மிட்செல், சமீர் ரிஷ்வி, முஸ்தாபிசுர் ரஷ்மான், அரவேலி அவினாஷ் ராவ் ஆகியோரை எடுத்துள்ளது. இவர்களில் சமீர் ரூபாய் 8.4 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த சமீர் அதிரடி ஆட்டக்காரராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் அம்பத்தி ராயுடுவுக்கு பதிலாக, அவரின் இடத்தினை நிரப்புவார் என சென்னை சூப்பர்கிங்ஸ் குழு தெரிவித்துள்ளது.