IND Vs NZ 3rd Test Day 2 (Photo Credit: @sports_tak X)

நவம்பர் 02, மும்பை (Sports News): இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி ஏற்கனவே 0-2 என தொடரை இழந்து இருக்கிறது. இந்நிலையில், மூன்றாவது மற்றும் கடைசி போட்டி (IND Vs NZ 3rd Test, Day 2) நேற்று மும்பையில் (Mumbai) தொடங்கியது. இதில் டாஸ் வென்று நியூசிலாந்து அணி முதல் நாள் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்து 235 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அடுத்து விளையாடிய இந்திய அணி 86 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து மோசமான நிலையை அடைந்தது. IND Vs NZ 3rd Test: கடைசி டெஸ்ட் போட்டியின் 2ஆம் மதிய உணவு இடைவேளை வரை இந்தியா அபாரம்.. கில் - பண்ட் அரைசதம்..!

இந்நிலையில், 2ஆம் நாள் இன்று தொடங்கிய நிலையில், ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக விளையாடி வந்த கில் மற்றும் பண்ட் இருவரும் அரைசதம் கடந்தனர். ரிஷப் பண்ட் (Rishabh Pant) 59 பந்துகளில் 60 ரன்கள் அடித்து அவுட்டானார். அடுத்து வந்த ஜடேஜா 14, சர்பராஸ் கான் 0, அஸ்வின் 6 என அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தனர். முதல் இன்னிங்ஸில் இந்தியா 59.4 ஓவர்களில் 263 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கில் (Shubman Gill) 90 ரன்கள் எடுத்தார். சுந்தர் 38 ரன்களுடன் நாட் அவுட் ஆக இருந்தார்.

இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு ஆரம்பத்திலேயே கேப்டன் லதாம் 1 ரன்னில் போல்ட் அவுட்டானார். பின்னர், சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்த நியூசிலாந்து அணியில் வில் யங் (Will Young) மட்டும் நிலைத்து நின்று விளையாடி 51 ரன்னில் அவுட் ஆனார். இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 43.3 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 171 ரன்கள் அடித்துள்ளது. இதன்மூலம் நியூசிலாந்து 143 ரன்கள் முன்னிலை வகிக்கிறது. இந்தியா சார்பில் ஜடேஜா (Ravindra Jadeja) 4, அஸ்வின் (Ravichandran Ashwin) 3, சுந்தர் மற்றும் ஆகாஷ் தீப் தலா 1 விக்கெட்களை கைப்பற்றியுள்ளனர். நாளை 3ஆம் நாள் ஆட்டத்தில் 1 விக்கெட்டை விரைவில் வீழ்த்தி, எளிதில் ரன்களை அடித்து இந்தியா வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

அஸ்வின் அபாரமான கேட்ச் பிடித்து அசத்தல்: