
மார்ச் 02, துபாய் (Sports News): நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் கிளன் பிலிப்ஸ் (Glenn Phillips). கடந்த 2014ம் ஆண்டு முதல் கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்த கிளன், 2017ல் இருந்து சர்வதேச அளவிலான போட்டியில் விளையாடி வருகிறார். இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில், சன் ரைடர்ஸ் ஹைதராபாத் அணிக்கு விளையாடி வருகிறார். 83 டி20, 41 ஒருநாள் போட்டியில் களமிறங்கி விளையாடி இருக்கும் கிளன், பந்துவீச்சு, பேட்டிங், பீல்டரிங் என அசத்தல் திறனை வெளிப்படுத்தும் வீரர் ஆவார். Virat Kohli: 14 பந்துகளில் கோலி விக்கெட் காலி.. தாவி பாய்ந்து கிங்-கை அனுப்பி வைத்த கிளன் பிலிப்ஸ்.. சிலிரீக்க வைக்கும் கேட்ச்.!
விராட் விக்கெட் எடுத்து ஒரே நொடியில் பேமஸ் ஆகிய கிளன்:
இந்நிலையில், இன்று துபாயில் நடைபெற்று வரும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியின் 12 வது ஆட்டத்தில், இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதி வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பௌலிங் தேர்வு செய்ததால், இந்தியா பேட்டிங் செய்தது. அப்போது, விராட் கோலி விக்கெட்-ஐ கிளன் பிலிப்ஸ் எடுத்தார். விராட் கோலி உட்பட கிரிக்கெட் ரசிகர்கள் மிரளும் அளவு, அவரின் கேட்ச் இருந்தது. கிரிக்கெட் ரசிகர்களால் பாராட்டப்பட்டு வரும் கிளன், முந்தைய ஆட்டங்களில் தாவி கேட்ச் பிடித்த வீடியோ உங்களுக்காக இணைக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து அணியை பொறுத்தமட்டில், அங்குள்ள உள்ளூர் மைதானங்களில் அதிக பயிற்சி எடுப்பது இளவயதில் இருந்து எடுக்கப்படும். அதனால், களப்பயிற்சி என்பது ஒரு தரமான வீரரை உருவாக்கியுள்ளது என்பதற்கு உதாரணமாக கிளன் இருக்கிறார்.
கிளன் பிலிப்ஸ் முந்தையை போட்டிகளில் கேட்ச் பிடித்த வீடியோ:
Glenn Phillips, The Flying Machine. pic.twitter.com/FqP3f02Io0
— Prithvi (@Prithvi10_) March 2, 2025