Match 12: Virat Kohli Wicket | ICC Champions Trophy 2025 (Photo Credit: @Masum__007 / @SonuKum00171039 X)

மார்ச் 02, துபாய் (Sports News): ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 (ICC Champions Trophy 2025) போட்டியில், 12 வது ஆட்டத்தில் இன்று இந்தியா - நியூசிலாந்து (IND Vs NZ Cricket) அணிகள் மோதுகின்றன. துபாயில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்த காரணத்தால், இந்திய அணி பேட்டிங் செய்கிறது. இன்றைய ஆட்டம் இரண்டு அணிகளுக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில், குரூப் ஏ பிரிவில் முதல் இடத்தை தக்க வைப்பதில் முக்கியம் என்பதால், இரண்டு அணிகளும் வெற்றிக்காக போராடுகிறது. Rohit Sharma: 17 பந்துகளில் விக்கெட் இழந்து வெளியேறிய ஹிட்மேன் ரோஹித்: விக்கெட் காலி.! 

அடுத்தடுத்து 3 விக்கெட்டுகள் இழப்பு:

இந்நிலையில், தொடக்கத்தில் களமிறங்கிய ஷுப்மன் ஹில், 7 பந்துகளில் 2 ரன்கள் எடுத்து அவுட் ஆகி வெளியேறினார். மேத் ஹென்றி வீசிய பந்தில், 2.5 வது ஓவரில் எல்பிடபிள்யு முறையில் விக்கெட் இழந்து அவர் வெளியேறினார். பின் களத்தில் இருந்த ரோஹித் சர்மா (Rohit Sharma), 17 பந்துகளை 15 ரன்கள் அடித்து கேட்ச் அவுட்டாகி வெளியேறினார். 5.1 வது ஓவரில் கைல் ஜெமிசன் பந்தை எதிர்கொண்டபோது, வில் யங் கேட்ச் பிடித்து விக்கெட்டை வீழ்த்தினார். விராட் கோலி 14 பந்துகளில் 11 ரன்கள் அடித்து, 6.4 வது ஓவரில் 14 வது பந்தை எதிர்கொண்டபோது, ஹென்றி வீசிய பந்தில் கிளன் பிலிப்ஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பிலிப்ஸ் வானில் தாவி மாயாஜாலம் செய்து விக்கெட் எடுத்தார். அவர் கேட்ச் பிடித்தார் என்பதை முதலில் அவராலும், பின் கோலி-யாலும் நம்ப இயலவில்லை. Shubman Gill: இந்தியாவின் நம்பிக்கை நாயகன்.. முக்கிய விக்கெட்டை தூக்கிய நியூஸி., ஷுப்மன் ஹில் அவுட்.! 

Virat Kohli Wicket by Glenn Phililps (Photo Credit: @internetumpire X)
Virat Kohli Wicket by Glenn Phililps (Photo Credit: @internetumpire X)

இந்திய அணி 12 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 41 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி இன்று தனது 300 வது ஒருநாள் கிரிக்கெட் தொடரில் களமிறங்கியபோது, அவரை உற்சாகப்படுத்த ரசிகர்கள் எழுப்பிய குரல் சத்தம் மைதானத்தை அதிரவைக்கும் வகையில், 120 டெசிபல் சத்தம் இருந்தது. ஆனால், அவர் வந்த வேகத்தில் ஆட்டம் இழந்து வெளியேறியது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. இந்தியாவின் முக்கிய விக்கெட்டுகள் பறிபோனது.

14 ஓவரில் இந்தியா 3 விகே இழந்து 44 ரன்கள் எடுத்தது.

விராட் கோலி விக்கெட் பறிபோன காட்சி: