டிசம்பர் 06, வெலிங்டன் (Sports News): நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் (NZ Vs ENG 2nd Test, Day 1) தொடரில் விளையாடி வருகிறது. தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், 2வது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் (Wellington) இன்று தொடங்கியது. இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. Jay Shah: ஐசிசி புதிய தலைவராக ஜெய் ஷா பதவியேற்பு..!
அதன்படி, முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 54.4 ஓவர்களில் 280 ரன்கள் அடித்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஹரி புரூக் (Harry Brook) 115 பந்துகளில் 123 ரன்கள் குவித்தார். மேலும், ஒல்லி போப் (Ollie Pope) 66 ரன்கள் அடித்தார். நியூசிலாந்து அணி தரப்பில் நாதன் ஸ்மித் (Nathan Smith) 4, வில்லியம் ஓரூக் 3, மேட் ஹென்றி 2 விக்கெட்களை வீழ்த்தினர். இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 26 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 86 ரன்கள் மட்டுமே அடித்தது.
இதன்மூலம் நியூசிலாந்து அணி 194 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது, அதிகபட்சமாக கேன் வில்லியம்சன் 37 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து அணி தரப்பில் பிரைடன் கார்ஸ் 2, வோக்ஸ், அட்கின்சன், ஸ்டோக்ஸ் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். இந்திய நேரப்படி நாளை அதிகாலை 3.30 மணிக்கு 2ஆம் நாள் ஆட்டம் தொடங்கும்.
அபாரமாக கேட்ச் பிடித்து அசத்திய டேரில் மிட்செல்:
𝐖𝐡𝐨 𝐬𝐚𝐢𝐝 𝐊𝐢𝐰𝐢𝐬 𝐜𝐚𝐧'𝐭 𝐟𝐥𝐲 😎
Daryl Mitchell's screamer sent Root back for just 3️⃣ 🫣
Watch #NZvENG 2nd Test, LIVE on #SonyLIV 📲 pic.twitter.com/BYEEiwwDwR
— Sony LIV (@SonyLIV) December 6, 2024