
பிப்ரவரி 09, இஸ்லாமாபாத் (Sports News): பாகிஸ்தான் நாட்டில் உள்ள லாகூர், காதாபி கிரிக்கெட் மைதானத்தில், நேற்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கும் - நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கும் இடையே ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. அப்போது, 38.3 வது ஓவரை நியூஸிலாந்து அணியின் பந்துவீச்சாளர் மைக்கேல் பிரேஸ்வெல் (Michael Bracewell) வீசினார். அந்த பந்தை எதிர்கொண்ட பாகிஸ்தான் அணியின் வீரர் குஷ்தில் ஷா (Khushdil Shah), தனது போட்டால் அடித்தார். Pat Cummins: பெண் குழந்தைக்கு தந்தையானார் பேட் கம்மின்ஸ்.. மனைவி நெகிழ்ச்சி பதிவு..!
ரச்சின் ரவீந்திரா காயம்:
அப்போது, பவுண்டரி லைன் பகுதியில் நின்றுகொண்டு இருந்த நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் ரச்சின் ரவிந்திராவை நோக்கி பந்து சென்றது. பந்தை அவர் சற்றும் எதிர்பாராத நிலையில், அவரின் முகத்தில் பந்து நேரடியாக தாக்கியது. இதனால் அவரின் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு, இரத்தம் வெளியேறியது. உடனடியாக அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டார். அவர் நலமுடன் இருப்பதாகவும், முகத்தில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது எனவும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
ரவீந்திராவுக்கு முகத்தில் காயம் ஏற்பட்டபோது பதிவான காணொளி:
Get well soon, Rachin Ravindra 🤞
- Scary scenes at Lahore for all cricket fans. pic.twitter.com/uERdaUuWHb
— Johns. (@CricCrazyJohns) February 8, 2025