South Africa Vs Pakistan | ODI Tri-Series (Photo Credit: @PCBCricket X)

பிப்ரவரி 12, கராச்சி (Cricket News): பாகிஸ்தான் நாட்டில் நடைபெற்று வரும் ஒருநாள் ட்ரை-சீரிஸ் கிரிக்கெட் தொடரில், 12 பிப்ரவரி 2025 இன்று பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிகள் மோதிக் கொள்கின்றன. அங்குள்ள கராச்சி நேஷனல் (National Stadium, Karachi) கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டம், நண்பகல் 02:30 மணிக்கு முதல் தொடங்கி நடைபெறுகிறது. இன்று அங்கு வானிலை பகல் நேரத்தில் 32 டிகிரி செல்சியசும், இரவு நேரத்தில் 17 டிகிரி செல்சியும் பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. காற்று மணிக்கு ஒன்பது கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். IND Vs ENG 3rd ODI: ஒயிட் வாஸ் செய்யுமா இந்தியா? வருண் சக்கரவர்த்தி விலகல்.. பவுலிங் தேர்வு செய்தது இங்கிலாந்து.! 

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி - தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி (Pakistan Vs South Africa ODI 2025):

டாஸ் வென்ற தென்னாபிரிக்க அணி பேட்டிங் தேர்வு செய்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பந்து வீச தயாராகி இருக்கிறது. ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் (Pakistan Cricket Squad) பாகர் ஜாமன், பாபர் அசாம், சவுத் சகேல், சல்மான் அலி, தையப் தாகீர், கௌசில் ஷா, சகீன் ஷா, முகம்மத் ஹூசைன், நசீம் ஷா, அக்பர் அஹ்மத் ஆகியோர் இடம்பெற்று இருக்கின்றனர். தம்பா தலைமையிலான தென்னாபிரிக்க கிரிக்கெட் (South Africa Cricket Squad) அணியில், மேத்திவ் பிரீட்ஸ், டோனி டீ சோரி, வெரென்யே, கின்ரிச் கால்சன், வியான் மல்டர், முத்துச்சாமி, கோர்பின் போச், கேசவ் மகாராஜ், லுங்கி நெகிடி, டாப்ரியாஸ் சான்சி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

தென்னாபிரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்தது: