நவம்பர் 04, மும்பை (Sports News): பதிமூனாவது ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 2023, இந்தியாவில் கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 19 நவம்பர் 2023 அன்று இறுதி போட்டி நடைபெறுகிறது.
48 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் போட்டித்தொடரில், 10 நாடுகளைச் சார்ந்த அணிகள் கலந்து கொள்கின்றனர். சனிக்கிழமை இன்று கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தாக, காலை 10 மணிக்கு நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளும், மதியம் 2 மணிக்கு இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் மோதிக்கொள்ளும் ஆட்டம் நடைபெறுகிறது. Pakistan Airbase Attacked: பாகிஸ்தானில் உள்ள பாக். விமானப்படைத்தளத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல்; பதற்றமான சூழல்.!
புள்ளிப்பட்டியல் இந்திய அணி தான் கலந்துகொண்ட 7 போட்டிகளில் ஏழிலும் வெற்றி அடைந்து, 14 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது. முதல் பிரிவில் நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்டன. இந்த ஆட்டத்தில் நியூசிலானது அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 401 ரன்கள் எடுத்துள்ளது.
நியூசிலாந்து அணியின் சார்பில் விளையாடிய வீரர்களில் கான்வே 39 பந்துகளில் 35 ரன்னும், ரவிச்சந்திரா 94 பந்துகளில் 108 ரன்னும், கேன் 79 பந்துகளில் 95 ரன்னும், மார்க் 27 பந்துகளை 39 ரன்னும் அடித்து அசத்தினர். இதனால் அணியின் ஸ்கோர் உயர்ந்து, பாகிஸ்தானுக்கு இலக்காக 402 ரன்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.