ஜூலை 04, கராச்சி (Cricket News): பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டுக்கு டி20 போட்டியில் விளையாட அடுத்த ஆண்டு இங்கிலாந்து செல்கிறது. ஐ.சி.சி ஆண்கள் உலகக்கோப்பை 2024 அமெரிக்காவில் உள்ள மேற்கிந்திய தீவுகளில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தனது வீரர்களை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. அதேபோல, பெண்கள் டி20 மற்றும் உலகக்கோப்பை போட்டிகளுக்கு தேர்வு செய்யும் பணிகளிலும் ஈடுபடுகிறது. Fear In Eyes – CHEVVAIKIZHAMAI: செவ்வாய்கிழமையில் நடந்தது என்ன?.. திகில் காட்சிகளுடன் வெளியானது பியர் இன் ஐஸ் திரைப்படத்தின் மிரட்டல் டீசர்.!

இங்கிலாந்தில் வைத்து நெதர்லாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுடன் டி20 போட்டிகளில் விளையாடவும் திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த உலகக்கோப்பை போட்டியின்போது பாகிஸ்தான் அணி இங்கிலாந்தால் ஆஸ்திரேலிய மண்ணில் தோற்கடிக்கப்பட்டது.

ஐ.சி.சி தரவரிசையில் 2ம் இடத்தில் உள்ள இங்கிலாந்து அணியுடன் 4ம் இடத்தில் உள்ள பாகிஸ்தான் அணி மோதுகிறது. மே மாதம் 22ம் தேதி தொடங்கும் ஆட்டம் 30ம் தேதி வரை வெவ்வேறு மைதானங்களில் நடைபெறுகிறது.