Neeraj Yadav Para Asian Games 2022 (Photo Credit: @Media_Sai X)

அக்டோபர் 28, ஹாங்சோ (Sports News): சீனாவில் உள்ள ஹாங்சோ நகரில் வைத்து நடைபெறும் பாரா (Para Asian Games 2022) ஆசிய நாடுகள் விளையாட்டுப்போட்டியில், 4 ஆயிரத்திற்கும் அதிகமான விளையாட்டு வீரர்கள், 22 பிரிவுகளில் நடைபெறும் போட்டிகளில் கலந்துகொள்கின்றனர்.

இந்நிலையில், பாரா ஆசிய விளையாட்டு போட்டிகளில், இந்தியா 100 பதக்கங்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இன்று நடைபெற்ற T20 1500 மீட்டர் அளவிலான தடகளப்போட்டியில், 5:38.81 நிமிடங்களில் பூஜா இலக்கை எட்டி வெண்கலப்பதக்கத்தை வென்றார். Dog Raped by Young Man: 23 வயது இளைஞரால் நாய் பாலியல் பலாத்காரம்; பால்கனியில் இருந்து தூக்கி வீசிய கொடூரம்.!

Para Athlete Pooja (Photo Credit: X)

ஆண்கள் ஈட்டி எறிதல் F55 பிரிவில் நீரஜ் யாதவ் 33.69 மீட்டர் ஈட்டி எரிந்து தங்கத்தை தனதாக்கினார். தேக் சந்த் வெண்கலப்பாதகத்தை பெற்றார். பாரா ரோவர்ஸ் போட்டியில், அனிதா மற்றும் நாராயணா கொங்கணபல்லே ஜோடி 8:50.71 நிமிடத்தில் இலக்கை அடைந்து வெள்ளிப்பதக்கம் வென்றது.

ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் T47 பிரிவில் திலீப் மகது, இலக்கை 49.48 நொடிகளில் எட்டி தங்கப்பதக்கம் வென்றார். இந்தியா தற்போது வரை 26 தங்கப்பதக்கம் உட்பட 100 பதக்கங்களை பெற்றுள்ளது. இன்றைய நாளின் போட்டிகள் முடிவில் புத்தகங்களின் எண்ணிக்கை உயரும்.