PBKS Vs RCB Qualifier 1 (Photo Credit: @Cricketracker X)

மே 28, முல்லான்பூர் (Sports News): டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025) தொடரின் லீக் சுற்று போட்டிகள் நேற்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில், புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடித்திருக்கும் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. அதன்படி, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணியும், 2வது இடத்தில் இருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் (PBKS Vs RCB) முதல் தகுதிச்சுற்றுப் போட்டியில் மோதுகின்றன. இப்போட்டி, நாளை (மே 29) இரவு 7.30 மணிக்கு முல்லான்பூர் மைதானத்தில் நடைபெறவுள்ளது. IPL 2025 Playoffs: ஐபிஎல் 2025 பிளே ஆஃப்; அணி விவரம், தேதி மற்றும் முழு அட்டவணை இதோ..!

நேருக்கு நேர்:

இப்போட்டியில், வெற்றிபெறும் அணி நேரடியாக ஜூன் 3ஆம் தேதி நடக்கும் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பதால், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இவ்விரு அணிகளும் இதுவரை 35 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 17 வெற்றியும், பஞ்சாப் கிங்ஸ் அணி 18 வெற்றியும் பெற்றுள்ளன.

உத்தேச பிளேயிங் லெவன்:

பஞ்சாப் கிங்ஸ்:

பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், ஜோஷ் இங்கிலிஸ், ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நேஹல் வதேரா, ஷஷாங்க் சிங், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மார்கோ யான்சன், ஹர்பிரீத் ப்ரார், கைல் ஜேமிசன், அர்ஷ்தீப் சிங்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:

பில் சால்ட், விராட் கோலி, ரஜத் பட்டிதார், லியாம் லிவிங்ஸ்டன், ஜித்தேஷ் சர்மா, ரொமாரியோ ஷெஃபெர்ட், குர்னால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட், யாஷ் தயாள், சுயாஷ் சர்மா.

நேரலையில் பார்ப்பது எப்படி?

டாடா ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின், அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports) தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு செய்கிறது. ஆன்லைனில் ஜியோ ஹாட்ஸ்டாரிலும் (Jio Hotstar) நேரலையில் பார்க்கலாம்.