IPL 2025 Playoffs (Photo Credit: @ImTheBaljeet X)

மே 28, முல்லான்பூர் (Sports News): டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025) தொடரின் லீக் சுற்று போட்டிகள் நேற்றுடன் முடிவடைந்தது. நேற்று (மே 27) நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் லக்னோவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடித்திருக்கும் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. LSG Vs RCB: ருத்ரதாண்டவம் ஆடிய ஜித்தேஷ் சர்மா.. ஆர்சிபி அணி அபார வெற்றி..!

டாடா ஐபிஎல் பிளே ஆஃப்:

அதன்படி, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணியும், 2வது இடத்தில் இருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் முதல் தகுதிச்சுற்றுப் போட்டியில் மோதுகின்றன. இப்போட்டி, நாளை (மே 29) இரவு 7.30 மணிக்கு முல்லான்பூர் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதனையடுத்து, 3வது மற்றும் 4வது இடங்களைப் பிடித்திருக்கும் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் எலிமினேட்டர் போட்டியில் மோதுகின்றன. இப்போட்டி, நாளை மறுநாள் (மே 30) இரவு 7.30 மணிக்கு முல்லான்பூர் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

டாடா ஐபிஎல் இறுதிப்போட்டி:

முதல் தகுதிச்சுற்றுப் போட்டியில் தோல்வியடைந்த அணியும், எலிமினேட்டர் போட்டியில் வென்ற அணியும், 2வது தகுதிச்சுற்றுப் போட்டியில் மோதும். இப்போட்டி, ஜூன் 1ஆம் தேதி அன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இறுதிப்போட்டியில் (IPL 2025 Final), முதல் தகுதிச்சுற்றுப் போட்டியில் வென்ற அணியும், 2வது தகுதிச்சுற்றுப் போட்டியில் வெற்றி பெற்ற அணியும் மோதுகின்றன. இறுதிப்போட்டி, ஜூன் 3ஆம் தேதி அன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும்.

ஐபிஎல் 2025 பிளே ஆஃப்: