Rahul Dravid (Photo Credit: Twitter)

ஆகஸ்ட் 29, இந்தியா (Sports News): ஆசிய கோப்பையின் (Asia Cup 2023) 16 வது சீசன் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடக்க இருக்கிறது. அதற்காக இன்று ரோஹித் ஷர்மா (Rohit Sharma) தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு செல்கிறது. இந்திய கிரிக்கெட் அணி இதுவரை 7 ஆசிய கோப்பைகளை கைப்பற்றி இருக்கிறது. இந்தத் தொடருக்கான பயிற்சி பெங்களூருவில் வெற்றிகரமாக முடிந்திருக்கும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் (Rahul Dravid) ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

ஐபிஎல் (IPL) தொடரில் விளையாடும் போது, கே எல் ராகுலுக்கு (K.L Rahul) தொடை பகுதியில் காயம் ஏற்பட்டதால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு இவர் ஆசிய கோப்பை தொடரில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டு வந்தார். ஆனால் நடைபெறவிருக்கும் முதல் இரண்டு போட்டிகளிலும் இவர் பங்கேற்க மாட்டார் என்று  ராகுல் டிராவிட் கூறியிருக்கிறார். M.K Stalin Conveys Onam Wishes: தமிழகத்தில் கலைகட்டும் ஓணம் பண்டிகை: மலையாள மொழியில் பேசி  வாழ்த்து வெளியிட்ட முதல்வர்.!

கே எல் ராகுல் காயங்களிலிருந்து முழுமையாக குணமடைந்திருந்தாலும், உலக கோப்பை  தொடர் நெருங்கவிருப்பதால் அவருக்கு மேலும் ஒரு வாரம் ஓய்வு தேவைப்படுவதாக பயிற்சியாளர் ட்ராவிட் தெரிவித்திருக்கிறார். ஆசிய கோப்பையின் சூப்பர் ஃபோர் மற்றும் இறுதிப் போட்டியில் கே எல் ராகுல் பங்கேடுப்பார் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

அதனால்  பாகிஸ்தானுக்கு (Pakistan) எதிராக விளையாடப் போகும் முதல் லீக் போட்டியில், நடுவரிசை ஆட்டக்காரராக இஷான் கிஷான் (Ishan Kishan) களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.