M.K Stalin (Photo Credit: Twitter)

ஆகஸ்ட் 29, சென்னை (Tamilnadu News): கேரள மாநிலத்தில் அறுவடை திருவிழாவான ஓணம் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் உற்சாகமாகவும் பிரம்மாண்டமாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. பாதாள லோகத்தை ஆண்ட மன்னன் மகாபலி திருவோணத்தன்று பூலோகத்தை காண வருவார் என்பது ஐதீகம். அவரின்  வருகையை  கொண்டாடும் விதமாக ஆவணி மாதம் அஸ்தம் நட்சத்திரம் தொடங்கி திருவோணம் வரை  10 நாள் ஓணம் பண்டிகை  கோலாகலமாக நடைபெறுகிறது.

வீடுகளில் பூ கோலங்கள் போட்டு அலங்கரித்தும் விளக்கேற்றியும்  மலையாள மக்கள் மகாபலியை வரவேற்பர். கேரளா மட்டுமல்லாமல்  தமிழகத்தில் மலையாள மக்கள்  அதிகமாக வாழும்  மாவட்டங்களான  கோவை, சென்னை, நீலகிரி, கன்னியாகுமரி  மற்றும் நாகர்கோவில் ஆகிய இடங்களிலும்  திருவோணம் பண்டிகை  சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

மேலும் இன்று தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. திருவோணம் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கேரள மக்களுக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். Cow Attack on Women: சாலையில் நடந்துவந்த பெண்ணின் மீது கொடூர தாக்குதல் நடத்திய மாடு; பதைபதைப்பு வீடியோ உள்ளே.! 

அந்த வகையில் திருவோணம் பண்டிகையை முன்னிட்டு மலையாள மக்களுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மலையாளத்தில் தனது ஓணம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அன்பும் நல்லிணக்கமும் மேம்பட்டு அனைவரையும் சமமாக  பார்க்கும் தேசமாக நாம் வளர வேண்டும் என்று கூறி மகிழ்ச்சி நிறைந்த  ஓணம்  வாழ்த்துக்களை தெரிவித்தார்.