
பிப்ரவரி 27, சென்னை (Sports News): டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025) போட்டித்தொடர், வரும் 22 மார்ச் 2025 முதல் 25 மே 2025 வரையில் நடைபெறவுள்ளது. இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பேராதரவுடன் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கும் ஐபிஎல் 2025 போட்டியில், மொத்தமாக 10 அணிகள் தங்களுக்குள் பலப்பரீட்சை நடத்தி அணி வெற்றிக்காக போராடும். இதற்கான ஏலமும் நடைபெற்று முடிந்தன. இதனிடையே, சென்னை அணியின் நட்சத்திர ஆட்டக்காரர், மின்னல் வேக செயல்பாடுகளுக்கு உலகளவில் பெயர்போன எம்.எஸ். தோனி (MS Dhoni), சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணிக்காக நடப்பு ஆண்டு தொடரில் விளையாடுகிறார். சமீபத்தில் அவர் சென்னை (Chennai) வந்திருந்தார். AUS Vs AFG: சாம்பியன்ஸ் டிராபி 2025: ஆஸி., Vs ஆப்கான் அணிகள் ஆட்டம் எப்போது? லாகூர் வானிலை நிலவரம் என்ன? நேரலை பார்ப்பது எப்படி? விபரம் இதோ.!
ரூ.9 கோடிக்கு ஏலம்:
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின், கடந்த 2008 முதல் 2015 வரையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் போட்டித்தொடரில் விளையாடி இருந்தார். பின் அவர் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டு புனே, கிங்ஸ் பஞ்சாப், டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்காக விளையாடி இருந்தார். கடந்த சீசனில் அஸ்வின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார். 2025 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில், சென்னை அணி மீண்டும் அவரை ரூ. 9.75 கோடிக்கு தேர்வு செய்தது. இதன் வாயிலாக அவர் ஐபிஎல் 2025 போட்டியை சிஎஸ்கே அணிக்காக விளையாடுவது உறுதி செய்யப்பட்டது.
அஸ்வினை வரவேற்று சிஎஸ்கே வீடியோ:
இந்நிலையில், ரவிச்சந்திரன் அஸ்வின் (Ravichandran Ashwin) சிறுவயதில் தொடங்கி, தற்போது சென்னை அணிக்காக மீண்டும் விளையாடவுள்ளதை 1.15 நிமிட வீடியோவில் சித்தரித்து சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், சொர்க்கமே என்றாலும் நமது ஊரைப்போல வருமா? என்ற பாணியில், அணிக்கு அஸ்வின் திரும்பியதை மகிழ்ச்சியுடன் வீடியோ பகிர்ந்து இருக்கின்றனர். இதுதொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
ரவிச்சந்திரன் அஸ்வினின் வருகை தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் வெளியிட்ட வீடியோ:
🤴 Ashwin
🏡 Anbuden
💛 Yellove
Homecoming On Time… Oh the feels 🥹✨ #WhistlePodu #DenComing #Yellove pic.twitter.com/7SIP7cLXvk
— Chennai Super Kings (@ChennaiIPL) February 27, 2025