RCB Fan Boy (Photo Credit: Twitter)

ஏப்ரல் 27, பெங்களூர் (Cricket News): டாடா ஐ.பி.எல் 2023 (TATA IPL 2023) போட்டியின் 36வது ஆட்டம் நேற்று (27-04-2023) நடைபெற்றது. பெங்களூரில் (Bangalore) உள்ள எம்.சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (Royal Challengers Bangalore Vs Kolkata Knight Riders) அணியும் மோதிக்கொண்டன.

இந்த ஆட்டத்தின் தொடக்கத்தில் டாஸ் வென்ற பெங்களூர் (RCB) அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து, பேட்டிங் செய்த கொல்கத்தா (KKR) அணி 5 விக்கெட் இழப்புக்கு 200 ரன்களை குவித்தது. ஜேசன் 29 பந்துகளில் 56 ரன்னும், நிதிஷ் 21 பந்துகளில் 48 ரன்னும் அதிகபட்சமாக அடித்து அணியின் ரன்களை உயர்த்தினர். Minor Girl Rape Judgement: 17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்; இளைஞருக்கு 32 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை.. நீதிபதி அதிரடி தீர்ப்பு.!

RCB Vs KKR 26-04-2023 Match (Photo Credit: @IPL Twitter)

201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணி களமிறங்கியது. விராட் கோலி 34 பந்துகளில் 57 ரன்கள் அடித்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்ல, அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி வெளியேறினர்.

இதனால் பெங்களூர் அணி 8 விக்கெட் இழப்புக்கு 20 ஓவர்கள் முடிவில் 179 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வியை தழுவியது. இந்த ஆட்டத்தின் போது சிறுவன் ஒருவன் தனது கைகளில் பதாகை ஒன்றை ஏந்தியிருந்தான்.

அந்த பதாகையை நான் பெங்களூர் அணி ஐ.பி.எல் போட்டியில் வெற்றி அடையும் வரையில் பள்ளிக்கூடத்திற்கு செல்லமாட்டேன் என எழுதப்பட்டு இருந்தது. இந்த சிறுவனின் புகைப்படம் வைரலாகி, நெட்டிசன்களிடையே கலாய்க்கப்பட்டு வருகிறது.