![](https://objectstorage.ap-mumbai-1.oraclecloud.com/p/H7eKs7B2tVOw_abojbrxoIB_6t5W29G2St7cuQZAAZxzK6otiY2itlU_lhorOfFB/n/bmd8qrbo34g7/b/uploads-DataTransfer/o/cmstamil.letsly.in/wp-content/uploads/2023/04/Cuddalore-Court-Minor-Girl-Rape-File-Pic-Photo-Credit-Google-Maps-Pixabay-380x214.jpg)
ஏப்ரல் 27, கடலூர் (Cuddalore News): திருவாரூர் (Thiruvarur) மாவட்டத்தில் உள்ள தியாகப்பெருமாநல்லூர் கிராமத்தில் வசித்து வருபவர் சதீஷ். இவர் மின்பணியாளராக பணியாற்றி வந்துள்ளார். இதற்கிடையில், இவருக்கும் - கடலூர் (Cuddalore) மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் (Chidambaram) சிவபுரி கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
சிறுமியிடையே இருந்த நட்பு (Friendship Turns Love) பழக்கத்தை காதலாக மாற்றிய சதீஷ், இருவரும் திருமணம் (Marriage) செய்து வாழலாம் என கடத்தி சென்று பாலியல் பலாத்காரமும் (Sexual Abuse) செய்துள்ளார். அதனைத்தொடர்ந்து சிறுமியை கைவிட்டதாக தெரியவருகிறது. Operation Kaveri: சூடானில் இருந்து தொடர்ந்து மீட்கப்படும் இந்தியர்கள்.. விமானங்கள், கப்பலில் தாயகம் வருகை.!
இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி பெற்றோரிடம் அடைக்கலம் அடைந்ததை தொடர்ந்து, சதீஷின் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவரின் மீது போக்ஸோ வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை கடலூர் மாவட்ட மகிளா (Cuddalore Pocso Court) நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குற்றவாளி சதீஷுக்கு 32 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து நீதிபதி உத்தமராஜா தீர்ப்பளித்து இருக்கிறார்.