PBKS Vs RCB Qualifier 1 Toss Update (Photo Credit: @RcbianOfficial X)

மே 29, முல்லான்பூர் (Sports News): டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025) தொடரின் லீக் சுற்று போட்டிகள் மே 27ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இந்நிலையில், புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் கிங்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய 4 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. அதன்படி, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணியும், 2வது இடத்தில் இருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் (PBKS Vs RCB) முதல் தகுதிச்சுற்றுப் போட்டியில் மோதுகின்றன. இப்போட்டி, நியூ சண்டிகரில் உள்ள முல்லான்பூர் மைதானத்தில் நடைபெறுகிறது. PBKS Vs RCB Qualifier 1: குவாலிஃபையர் 1; நாளை பஞ்சாப் - பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை..! நேரலையில் பார்ப்பது எப்படி..?

பஞ்சாப் கிங்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Punjab Kings Vs Royal Challengers Bengaluru):

இப்போட்டியில், வெற்றிபெறும் அணி நேரடியாக ஜூன் 3ஆம் தேதி நடக்கும் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். அதே சமயத்தில், தோல்வியடையும் அணி எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெறும் அணியுடன், ஜூன் 1ஆம் தேதி நடைபெறும் 2வது தகுதி சுற்றுப் போட்டியில் மோதும். இவ்விரு அணிகளும் இதுவரை 35 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 17 வெற்றியும், பஞ்சாப் கிங்ஸ் அணி 18 வெற்றியும் பெற்றுள்ளன. இப்போட்டியில், டாஸ் வென்ற ஆர்சிபி அணி கேப்டன் ரஜத் பட்டிதார் முதலில் பவுலிங் தேர்வு செய்துள்ளார்.