செப்டம்பர் 04, புதுடெல்லி (Technology News): செல்போன் உலகில் 80, 90-கள் தலைமுறையினால் இன்றுவரை மறக்க இயலாதது நோக்கியா செல்போன் (Nokia). பார்க்க கல்போல, இன்று வரை ஓயாது உழைத்துக்கொண்டு இருக்கும் நோக்கியா ஸ்மார்ட்போன், மக்களால் மறக்க இயலாதவைகளுள் ஒன்றாகும்.
நோக்கியா தனது ஸ்மார்ட்போனை (Nokia Smartphone) அறிமுகம் செய்து பின்னாளில் பல்வேறு விமர்சனங்கள் காரணமாகவும், போட்டித்தன்மை காரணமாகவும் நோக்கியா ஸ்மார்ட்போனின் விற்பனை கடுமையான சரிவை எதிர்கொண்டது. Drumstick Flower Benefits: முருங்கை பூவுடன் இதனை சேர்த்து குடித்தால், அந்த பிரச்சனைக்கு சரியான தீர்வு.. அசத்தல் நன்மைகள் லிஸ்ட் இதோ..!
பல சிரமங்களுக்கு மத்தியில் நோக்கியா தனது 5G ஸ்மார்ட்போனை செப்டம்பர் மாதம் 6ம் தேதி (நாளை மறுநாள்) அறிமுகம் செய்கிறது. இந்தியாவில் இதன் விற்பனை தொடங்கும் எனவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
5000 mAh பேட்டரி திறன், 50MP கேமிரா, 20W சார்ஜர், Micro-USB Port, 5.1 Bluetooth, 802.11 Wi Fi உட்பட பல சிறப்பம்சத்துடன் நோக்கியா 5G ஸ்மார்ட்போன் களமிறங்குகிறது.
Are you ready to experience speed with Nokia 5G smartphone? Stay tuned for the announcement on September 6, 2023.#Nokiaphone #5G #ComingSoon pic.twitter.com/XigoMvfxAW
— Nokia Mobile India (@NokiamobileIN) September 2, 2023