நவம்பர் 16, ஜோக்கன்ஸ்பர்க் (Cricket News): சூரியகுமார் யாதவ் (Suryakumar Yadav) தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்கா நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இந்த சுற்றுப்பயணத்தில், நான்கு டி20 போட்டிகளில் தென்னாபிரிக்க - இந்திய (IND Vs SA T20i Series 2024) அணிகள் மோதிக்கொண்டன. இந்த போட்டியில் முதல் மற்றும் மூன்றாவது ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி அடைந்தது. இதனால் நான்காவது போட்டியிலும் வெற்றி அடைந்து இந்திய அணி தொடரை கைப்பற்றுமா? அல்லது தென்னாபிரிக்க அணி வெற்றி அடைந்து தொடரை சமன் செய்யும? என்ற எதிர்பார்ப்பு எழுந்திருந்தது.
அசத்திய இந்திய சிங்கங்கள்:
நவம்பர் 15ஆம் தேதியான நேற்று, அங்குள்ள ஜோக்கர்ன்ஸ்பர்க் நகரில் இருக்கும் வாண்டரர்ஸ் (The Wanderers Stadium) கிரிக்கெட் மைதானத்தில் வைத்து இந்த ஆட்டம் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் வீரர்கள் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர். இந்திய அணியின் சார்பில் களமிறங்கிய சஞ்சு சாம்சன் 56 பந்துகளில் 109 ரன்னும், திலக் வருமா 47 பந்துகளில் 120 ரன்னும் அடித்து அசத்தியிருந்தனர். போட்டியின் முடிவில் இந்திய கிரிக்கெட் அணி 20 ஓவர்களில் ஒரேயொரு விக்கெட்டை மட்டும் இழந்து 283 ரன்கள் குவித்து இருந்தது. WI Vs ENG 3rd T20I: ஹாட்ரிக் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து.. வெஸ்ட் இண்டீஸ் தொடர் தோல்வி..!
இந்திய அணி அபார வெற்றி:
இதனையடுத்து, மறுமுனையில் 284 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி களமிறங்கிய நிலையில், அந்த அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் அனைவரும் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து வெளியேறினர். திரிஷ்டன் மட்டும் நின்று நிதானமாக ஆடினாலும், அவரது விக்கெட்டும் ஒரு கட்டத்தில் பறிபோனது. இதனால் அந்த அணி 18.2 ஓவர் முடிவில் பத்து விக்கெட்டையும் இழந்து, 148 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய கிரிகெட் அணி 135 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி அடைந்தது.
சஞ்சு சாம்சன் - திலக் வர்மா சாதனை:
இதன் மூலமாக தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. மேலும், இந்திய கிரிக்கெட் அணியின் வீரரான திலக் வர்மா, தான் எதிர்கொண்ட சமீபத்திய 4 டி20 போட்டிகளில் அடுத்தடுத்து 100 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனை படைத்திருக்கிறார். நேற்றைய ஆட்டத்தில் சஞ்சு - திலக் பார்ட்னர்ஷிப் மிகப்பெரிய அளவில் கவனிக்கப்பட்டது. அதேநேரத்தில், ஐசிசி முழு உறுப்பினரின் பட்டியலில், ஒரே போட்டியில் இரண்டு வீரர்கள் சேர்ந்து சதம் விளாசியது இதுவே முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரே போட்டியில் இரண்டு பேர் சேர்ந்து சதம் விளாசியது சர்வதேச போட்டியில் மூன்றாவது முறை எனினும், ஒட்டுமொத்தமாக எட்டாவது முறை என்றாலும், முழுநேர உறுப்பினர்கள் நாடுகளில் இதுவே முதல் முறை ஆகும். Ranji Trophy 2024-25: ரஞ்சி கோப்பை வரலாற்றிலேயே மாபெரும் சாதனை.. ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட் வீழ்த்திய அன்ஷுல் கம்போஜ்..!
இதனால் ஆட்ட நாயகனாக திலக் வர்மா தேர்வு செய்யப்பட்டார். இந்தியா தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியை 3-1 கணக்கில் கைப்பற்றி தாயகம் திரும்புகிறது.
வெற்றிகொண்டாட்டத்தில் தென்னாபிரிக்க மண்ணில் இந்திய அணியினர்:
#TeamIndia seal series victory in style yet again! 🏆#SAvIND #JioCinema #Sports18 #ColorsCineplex #JioCinemaSports pic.twitter.com/rvablJshgs
— JioCinema (@JioCinema) November 15, 2024