ஜூன் 21, சென்னை (Cricket News): பி.சி.சி.ஐ சார்பில் இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில், சமீபத்தில் நடைபெற்ற 2023 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரை சென்னை அணி கைப்பற்றியது.

இறுதி போட்டி குஜராத்தில் நடைபெற்றபோது, மழை காரணமாக ஒருநாள் ஒத்தி வைக்கப்பட்ட போட்டி, இறுதியில் குஜராத் அணி பேட்டிங் செய்து முடித்து, சென்னை அணியின் பேட்டிங்கின்போது மழை பெய்தது.

இதனால் சென்னை அணி கோப்பையை கைப்பற்றுமா? ஆட்டம் நடைபெறுமா? என பல கேள்விகள் எழுந்து, இறுதியில் ரவீந்திர ஜடேஜாவின் அதிரடி ஆட்டத்தால் சென்னை அணி வெற்றி பெற்றது.

இன்று சர்வதேச அளவில் செல்பி டே (Selfie Day) கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ட்விட்டர் பக்கம், தோனி தனது அணியுடன் எடுத்துக்கொண்ட வெற்றி செல்பியை பதிவிட்டுள்ளது.