Sri Lanka Women Vs England Women (Photo Credit : @ITGDsports X)

அக்டோபர் 11, கொழும்பு (Sports News): ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 (ICC Women's Cricket World Cup 2025) கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 30ஆம் தேதி முதல் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. நவம்பர் 2ஆம் தேதி வரை போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதும் இந்த போட்டியின் இறுதிப் போட்டி நவம்பர் 2ஆம் தேதி நிறைவு பெறுகிறது. தற்போது வரை 11 போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. அக்டோபர் 10-ஆம் தேதி வங்கதேசம் மகளிர் தேசிய கிரிக்கெட் அணி - நியூசிலாந்து மகளிர் தேசிய கிரிக்கெட் அணி இடையே நடைபெற்ற ஆட்டத்தில் நியூசிலாந்து மகளிர் அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இலங்கை எதிர் இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் (Sri Lanka - England Women's Cricket Match):

அடுத்ததாக 12வது போட்டியில் இலங்கை மகளிர் தேசிய கிரிக்கெட் அணியும், இங்கிலாந்து மகளிர் தேசிய கிரிக்கெட் அணியும் (Sri Lanka Women's National Cricket Team Vs England Women's National Cricket Team) மோதுகின்றன. இந்த போட்டி அக்டோபர் 11-ஆம் தேதியான இன்று இலங்கை நாட்டில் கொழும்பு கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. இந்த போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி செயலியில் காணலாம். இன்று நண்பகல் 3 மணியளவில் போட்டி தொடங்கி நடைபெற இருக்கிறது. இந்நிலையில் போட்டியின் முதல் கட்டமாக டாஸ் நடைபெற்ற நிலையில், டாஸில் வென்ற இலங்கை அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. இதனால் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்கிறது. India Vs West Indies: இந்தியா அனல்பறக்கும் பேட்டிங்.. மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 518 ரன்கள் இலக்கு.. சுப்மன் கில் & யஜஸ்வி ஜெய்ஸ்வால் இரட்டை சதம்.!

இலங்கை Vs இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் (ICC Women's Cricket World Cup 2025 Sri Lanka Vs England):

போட்டி அணிகள்: இலங்கை W Vs இங்கிலாந்து W (Sri Lanka Women's Vs England Women's Cricket)

நடைபெறும் இடம்: ஆர். பிரேமதாசா கிரிக்கெட் மைதானம், கொழும்பு, இலங்கை

போட்டி முறை: 50 ஓவர்கள்

போட்டி தொடங்கும் நேரம்: நண்பகல் 03:00 மணி

நேரலை விபரம்: ஜியோ ஹாட்ஸ்டார் (Jio Hotstar), ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports)

இலங்கை பெண்கள் Vs இங்கிலாந்து பெண்கள் அணி விபரம் (Sri Lanka Women Vs England Women Squad):

இங்கிலாந்து பெண்கள் (England Women Squad):

டாமி பியூமண்ட், ஆமி ஜோன்ஸ் (WK), ஹீதர் நைட், நாட் ஸ்கைவர்-பிரண்ட் (C), சோபியா டன்க்லி, எம்மா லாம்ப், ஆலிஸ் கேப்சி, சார்லி டீன், சோஃபி எக்லெஸ்டோன், லின்சி ஸ்மித், லாரன் பெல்.

இலங்கை பெண்கள் (Sri Lanka Women Squad):

ஹாசினி பெரேரா, சாமரி அதபத்து (C), ஹர்ஷிதா சமரவிக்ரம, விஷ்மி குணரத்னே, கவிஷா தில்ஹாரி, நிலக்ஷிகா சில்வா, அனுஷ்கா சஞ்சீவனி (WK), தேவ்மி விஹங்கா, சுகன்த்கா குமாரி, சுகன்த்கா குமாரி, சுகன்டோகா குமாரி, பிரபோதனி.