
மார்ச் 20, கொல்கத்தா (Sports News): டாடா இந்தியன் பிரீமியர் லீக் 2025 (Indian Premier League 2025) போட்டிகள், 22 மார்ச் 2025 முதல் தொடங்குகிறது. 10 அணிகள் மோதிக்கொள்ளும் 89 ஆட்டங்கள், இந்தியாவில் உள்ள வெவ்வேறு மைதானங்களில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஐபிஎல் 2025 (IPL 2025) போட்டியின், முதல் மட்டும் இறுதி ஆட்டம், கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. போட்டியின் நேரலையை ஜியோ ஹாட்ஸ்டார் (Jio HotStar) செயலி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports), ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் (Star Sports Tamil) தொலைக்காட்சியில் காணலாம்.
முதல் போட்டி எங்கு? எப்போது? (IPL 2025 1st Match):
ஐபிஎல் 2025 போட்டியில் முதல் ஆட்டம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு (Kolkata Knight Riders Vs Royal Challengers Bangalore) இடையே, மார்ச் 22, 2025 அன்று, கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் (Eden Gardens Stadium) நடைபெறுகிறது. கேகேஆர் - ஆர்சிபி அணிகள் (KKR Vs RCB Cricket) இடையே நடைபெறும் ஆட்டத்தில், பலம்பொருந்திய இரண்டு அணிகளும் பங்கேற்கும் என்பதால், அன்றைய ஆட்டம் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 2025 ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டம் என்பதால், கொண்டாட்டத்துடன் தொடங்குகிறது. மார்ச் 22, 2025 அன்று இரவு 6 மணிக்கு மேல் கொண்டாட்டங்கள் தொடங்கி, 07:30 மணிக்கு போட்டி தொடங்கி நடைபெறும். சொந்த மண்ணில் வெற்றிபெற கொல்கத்தா அணியும், தொடரில் முதல் வெற்றியை உறுதி செய்ய பெங்களூர் அணியும் பலப்பரீட்சை நடத்தும். அணியின் நடுவர்களாக வினோத் செஸான், அபிஜித் பெங்கேரி, மதனகோபால் ஜெயராமன் (மூன்றாவது நடுவர்) ஆகியோர் பங்கேற்கின்றனர். IPL 2025 All Squads: ஐபிஎல் 2025 போட்டி; தொடங்கும் தேதி, நேரம் எப்போது? எந்தெந்த அணியில் யார்? முழு விபரம் உள்ளே.!

கொல்கத்தா - பெங்களூர் அணி வீரர்கள் விபரம் (KKR Vs RCB Squad):
கேகேஆர் அணி வீரர்கள் (KKR Squad):
அஜின்கிய ரஹானே (Ajinkya Rahane) வழிநடத்தும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் (Kolkata Knight Riders Squad 2025) ரிங்கு சிங் (Rinku Singh), மனிஷ் பாண்டே (Manish Pandey), ரோவ்மன் போவெல் (Rovman Powell), ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி (Angkrish Raghuvanshi), லுவனித் சிசோடியா (Luvnith Sisodia), குயின்டன் டி காக் (Quinton De Kock), ரஹ்மானுல்லாஹ் குர்பாஸ் (Rahmanullah Gurbaz), ஆன்ரி ரூசெல் (Andre Russell), சுனில் நரானே (Sunil Narine), அனுகூல் ராய் (Anukul Roy), மொயீன் அலி (Moeen Ali), வெங்கடேஷ் ஐயர் (Venkatesh Iyer), ராமந்தீப் சிங் (Ramandeep Singh), ஹர்ஷித் ராணா (Harshit Rana), வருண் சக்கரவர்த்தி (Varun Chakaravarthy), அன்ரிச் நோர்ட்ஜெ (Anrich Nortje), ஸ்பென்சர் ஜான்சன் (Spencer Johnson), வைபவ் அரோரா (Vaibhav Arora), சேட்டன் சங்கரியா (Chetan Sankariya), மயங்க் மார்கண்டே (Mayank Markande) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
பெங்களூர் அணி வீரர்கள் (RCB Squad):
ரஜத் படிதார் (Rajat Patidar) வழிநடத்தும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் (Royal Challengers Bangalore Squad 2025) லியாம் லிவிங்ஸ்டன் (Liam Livingstone), விராட் கோலி (Virat Kohli), தேவ்தத் படிக்கல் (Devdutt Padikkal), ஸ்வஸ்திக் சிகாரா (Swastik Chhikara), ஜிதேஷ் சர்மா (Jitesh Sharma), பில் சால்ட் (Phil Salt), ஸ்வப்னில் சிங் (Swapnil Singh), மனோஜ் பாண்ட்ஜ் (Manoj Bhandage), குர்னால் பாண்டியா (Krunal Pandya), டிம் டேவிட் (Tim David), ஜேக்கப் பெத்தெல் (Jacob Bethell), புவனேஸ்வர் குமார் (Bhvneshwar Kumar), ரசிஹ் ஸலாம் (Rasikh Salam), சுயாஸ் சர்மா (Suyash Sharma), மோஹித் ராதே (Mohit Rathee), அபிநந்தன் சிங் (Abhiandan Singh), ஜோஷ் ஹஸ்ட்லேவுட் (Josh Hazlewood), ரோமரியோ ஷெப்பர்ட் (Romario Shepherd), நுவான் துஷாரா (Nuwan Thushara), யாஷ் தயால் (Yash Dayal), லுங்கி நெகிடி (Lungi Ngidi) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.