
மார்ச் 24, விசாகப்பட்டினம் (Cricket News): டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025) போட்டியில், இதுவரை 3 ஆட்டங்கள் நடைபெற்று முடிந்துள்ளன. இன்று (24 மார்ச் 2025) திங்கட்கிழமை, நான்காவது ஆட்டம் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் - டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் (Lucknow Super Giants Vs Delhi Capitals Timeline) மோதுகின்றன. இன்று இரவு 07:30 மணியளவில் போட்டி தொடங்கி விறுவிறுப்புடன் நடைபெறுகிறது. இந்த போட்டியை ஜியோ ஹாட்ஸ்டார் (Jio HotStar), ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports), ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் (Star Sports Tamil) பக்கத்தில் காணலாம். CSK Vs MI: தோனியை சீண்டிய தீபக் சாஹர்.. பேட்டால் செல்லமாக அடித்த தோனி.., வீடியோ உள்ளே..!
லக்னோ அணி பேட்டிங் செய்கிறது:
இந்நிலையில், முதலில் டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி, பௌலிங் தேர்வு செய்தது. இதனால் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி பேட்டிங் செய்கிறது. எல்எஸ்ஜி Vs டிசி போட்டியில், லக்னோ அணியை ரிஷப் பண்ட் வழிநடத்துகிறார். டெல்லி கேபிட்டல்ஸ் அணியை அக்சர் படேல் வழிநடத்துகிறார். இன்றைய போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் (Lucknow Super Giants Playing Squad 2025) அணியின் சார்பில் ஆயுஷ் படோனி, மிட்செல் மார்ஷ், ஐடன் மார்க்ரம், டேவிட் மில்லர், நிக்கோலஸ் பூரன், ரிஷப் பந்த், பிரின்ஸ் யாதவ், திக்வேஷ் சிங், ஷாபாஸ் அகமது, ஷர்துல் தாக்கூர் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோர் விளையாடுகின்றனர். டெல்லி கேபிட்டல்ஸ் (Delhi Capitals Playing Squad 2025) அணியின் சார்பில் பாப் டு ப்ளசிஸ், ஜேக் ப்ரஷர், அபிஷேக் போரல், சமீர் ரிஸ்வி, அக்சர் படேல், திரிஷ்டன் ஸ்டப், விப்ராஜ் நிகாம், மிட்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ், மோகித் சர்மா ஆகியோர் விளையாடுகின்றனர்.
டாஸ் வென்ற டெல்லி பௌலிங் செய்கிறது:
🚨 Toss 🚨@DelhiCapitals won the toss and elected to field against @LucknowIPL
Updates ▶️ https://t.co/aHUCFODDQL#TATAIPL | #DCvLSG pic.twitter.com/FKwFBfGGt8
— IndianPremierLeague (@IPL) March 24, 2025