LSG Vs SRH | IPL 2025 (Photo Credit: @IPL X)

மே 19, லக்னோ (Sports News): டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025) போட்டியில், இன்று லக்னோவில் உள்ள ஏக்நா கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதரபாத் (Lucknow Super Giants Vs SunRisers Hyderabad) அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் தொடரில் இருந்து அரையிறுதிக்கு தகுதி பெறாமல் வெளியேறிய சன்ரைசர்ஸ் அணியும், தொடர் படுதோல்வியுடன் பரிதவித்து நிற்கும் லக்னோ அணியும் மோதுகிறது. இரண்டு அணிகளில் ஆறுதல் வெற்றியை பெறப்போவது யார்? என ரசிகர்களும் எதிர்பார்த்து வருகின்றனர். PBKS Vs RR: ஏமாற்றத்துடன் வெளியேறிய வைபவ் சூர்யவன்ஷி.. அரைசதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த ஹர்பிரீத்.! 

சன்ரைசர்ஸ் எதிர் சூப்பர் ஜெயிண்ட்ஸ் (SunRisers Vs Super Giants IPL 2025):

இன்று நடைபெறும் ஆட்டத்தில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. இதனால் லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்கிறது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் சார்பில் இன்று அபிஷேக் சர்மா, இஷான் கிஷான், நிதிஷ் குமார் ரெட்டி, ஹென்றிச் காளீசன், அணிகித் வர்மா, கமிண்டு மெண்டிஸ், பேட் கம்மின்ஸ், ஹர்ஷல் படேல், ஹரிஷ் துபே, ஸியேஷன் அன்சாரி, ஈசன் மலிங்கா களமிறங்குகின்றனர். லக்னோ அணியின் சார்பில் ஏய்டன் மார்க்கம், மிட்செல் மார்ஷ், நிகோலஸ் பூரன், ரிசப் பண்ட், அப்துல் சமேத, ஆயுஷ் பதோணி, ஆகாஷ் தீப், ஆவேச கான், ரவி பீஷ்நோய், திக்வேஸ் சிங், வில் ரூர்க் ஆகியோர் களமிறங்குகின்றனர்.

சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணி டாஸ் வென்று பௌலிங் தேர்வு: