Rajat Patidar | Virat Kohli (Photo Credit: @Radha2497 / @CBMCRICKET X)

பிப்ரவரி 13, பெங்களூர் (Sports News): டாடா ஐபிஎல் 2025 போட்டிகள், மார்ச் மாதம் 14ம் தேதி முதல் தொடங்கி, மே மாதம் 25 வரை நடைபெறுகிறது. 10 அணிகள் போட்டியிடும் இந்தியன் பிரீமியர் லீக் போட்டி, மொத்தமாக 74 போட்டிகள் நடைபெறுகின்றன. கடந்த 2008ம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, 2025 ஐபிஎல் போட்டிக்காக தயாராகி வருகிறது. இதனை முன்னிட்டு இன்று அந்த அணியின் கேப்டன் தொடர்பான அறிவிப்பும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. 17 சீசன்களாக ஐபிஎல் தொடரில் களமிறங்கி விளையாடி வரும் பெங்களூர் அணி, ஒருமுறை கூட கோப்பையை பெறவில்லை. IND Vs ENG 3rd ODI 2025: ஒயிட் வாஸ் ஆன இங்கிலாந்து.. 145 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா மெகா திரில் வெற்றி.. சுப்மன், ஷ்ரேயஸ், விராட் அசத்தல் ஆட்டம்.! 

பெங்களூர் அணியின் புதிய கேப்டன் அறிவிப்பு:

அந்த அணியின் கேப்டன்களாக ராகுல் ட்ராவிட், பீட்டர்சன், அணில் கும்பலே, வாட்சன், விராட் கோலி என பல முக்கிய புள்ளிகள் வழிநடத்தி இருந்தாலும், 2009, 2011, 2016 என 3 முறை ரன்னர் வரை சென்றது. பாப் டூப்ளசிஸ் தலைமையில் கடந்த 2024 ஐபிஎல் போட்டியில் களமிறங்கிய பெங்களூர் அணி, மூன்றாவது ரன்னர் பட்டத்தை மட்டுமே வென்றது. இந்நிலையில், இன்று பெங்களூரில் நடைபெற்ற ஆர்சிபி அணியின் செய்தியாளர்கள் சந்திப்பில், அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஆண்டி பிளவர், ஆலோசகர் தினேஷ் கார்த்திக், அணியின் புதிய கேப்டனை அறிமுகம் செய்தனர். அதாவது, 2025 ஐபிஎல் போட்டிகளுக்கான பெங்களூர் அணியின் கேப்டன் பொறுப்பு, ரஜத் படிதாருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரஜத் படிதார் (Rajat Paditar) ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சிக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

ஆர்சிபி அணியின் புதிய கேப்டன் குறித்த சஸ்பென்ஸ் கொடுத்த அணி:

ஆர்சிபி அணியின் கேப்டனாக விராட் கோலி வேண்டும் என எதிர்பார்க்கும் பதிவர்:

பெங்களூர் அணியின் புதிய கேப்டன் ரஜத் படிதார் நியமனம்:

ஆர்சிபி அணிக்கு புதிய அத்தியாயம்: