IND Vs ENG 3rd ODI 2025 | Team India Victory (Photo Credit: @BCCI X)

பிப்ரவரி 12, அகமதாபாத் (Gujarat News): இந்தியா - இங்கிலாந்து (India Vs England 3rd ODI) அணிகளுக்கு இடையேயான இறுதி ஒருநாள் போட்டி, குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி (IND Vs ENG 3rd ODI 2025) முதலில் பேட்டிங் செய்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்ததால், இந்தியா முதலில் பேட்டிங் செய்து 50 ஓவரில் 10 விக்கெட்டையும் இழந்து 356 ரன்கள் குவித்து அசத்தி இருந்தது. IND Vs ENG 3rd ODI: ஒயிட் வாஸ் செய்யுமா இந்தியா? வருண் சக்கரவர்த்தி விலகல்.. பவுலிங் தேர்வு செய்தது இங்கிலாந்து.! 

ஆறுதல் வெற்றிகூட இங்கிலாந்துக்கு இல்லை:

மறுமுனையில் 357 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, நின்று நிதானமாக ஆடினாலும், அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து பரிதவித்தது. போட்டியின் இறுதியில் இந்திய கிரிக்கெட் அணி 145 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி அடைந்தது. இங்கிலாந்து அணி 34.2 ஓவரில் 10 விக்கெட்டையும் இழந்து 214 ரன்கள் மட்டுமே குவித்து இருந்தது. இதனால் இங்கிலாந்து - இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில், ஆறுதல் வெற்றி கூட அடையாமல் தோல்வி அடைந்தது. கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்கு பின் இங்கிலாந்து, இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில், 50 ஓவர்கள் கொண்ட ஒரு ஒருநாள் போட்டியில் கூட வெற்றிபெறாமல் ஒயிட்வாஷ் ஆகியுள்ளது. IND Vs ENG 3rd ODI: இமாலய இலக்கை நிர்ணயம் செய்த இந்தியா.. கரைசேருமா இங்கிலாந்து? ஷுப்மன், ஷ்ரேயாஸ் அசத்தல் ஆட்டம்.! 

இந்திய அணி திரில் வெற்றி:

இங்கிலாந்தின் சார்பில் விளையாடிய பில் சால்ட் 21 பந்துகளில் 23 ரன்னும், பென் டக்கட் 22 பந்துகளில் 34 ரன்னும், டாம் 41 பந்துகளில் 38 ரன்னும், ஜோ ரூட் 29 பந்துகளில் 24 ரன்னும், ஹீரோ புரூக் 26 பந்துகளில் 19 ரன்னும், கேஸ் 19 பந்துகளில் 38 ரன்னும் எடுத்திருந்தனர். எஞ்சிய அனைவரும் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து வெளியேறினர். கிட்டத்தட்ட 24 வது ஓவரிலிருந்து 34 வது ஓவர் வரை 10 ஓவர்களுக்குள் ஆறு விக்கெட் அடுத்தடுத்து சரிந்தது. இதனால் இங்கிலாந்து அணி இலக்கை நெருங்க முடியாமல் 145 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய அளவில் தோல்வி அடைந்துள்ளது. இந்திய அணி 142 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியடைந்து, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றி கொண்டாட்டத்தில் நிலைத்திருக்கிறது. இதனால் ஒட்டு மொத்த இந்தியாவும், இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றி காரணமாக மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஜோ ரூட்டின் விக்கெட்டை எடுத்த கொண்டாட்டத்தில் இந்திய அணி: